மகளிர் அணி நிர்வாகிகளுடன் தனுஷ் கலந்துரையாடல்: 3,000 பேருக்கு விருந்து

வெள்ளி காமாட்சி விளக்கு பரிசு
மகளிர் அணி நிர்வாகிகளுடன் தனுஷ் கலந்துரையாடல்: 3,000 பேருக்கு விருந்து
Updated on: 
1 min read

சென்னை: நற்​பணி இயக்​கத்​தின் மகளிர் அணி நிர்​வாகி​களை நடிகர் தனுஷ் சந்​தித்து கலந்​துரையாடினார். நிகழ்ச்​சி​யில் பங்​கேற்ற பெண்​களுக்கு வெள்ளி காமாட்சி விளக்கு பரிசாக வழங்​கப்​பட்​டது.

விஜய் முதல்​வ​ரானதை தொடர்ந்து, நடிகர் தனுஷும் அரசி​யல் களத்​தில் ஆர்​வம் காட்டி வரு​கிறார். சமீபத்​தில் கோவை​யில் நடை​பெற்ற கூட்​டத்​தில் அகில இந்​திய தனுஷ் ரசிகர் மன்​றம் என்ற அமைப்​பின் பெயர் ‘தனுஷ் நற்​பணி இயக்​கம்’ என மாற்​றப்​பட்​டது. புதிய லோகோ, கொடியும் அறி​முகம் செய்​யப்​பட்​டன. இதற்​கிடையே, டெல்​லிக்கு சென்ற தனுஷ், அங்கு பாஜக தலை​வர்​கள் சிலரை சந்​தித்​துப் பேசிய​தாகவும், ‘தமிழக எழுச்​சிக் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்​கத் திட்​ட​மிட்​டுள்​ள​தாகவும் தகவல்​கள் வெளியாகின.

இந்​நிலை​யில், சென்னை ஓஎம்​ஆர் சாலை​யில் உள்ள செம்​மஞ்​சேரி தனியார் கல்​லூரி​யில் தனுஷ் நற்​பணி இயக்​கத்​தின் மகளிர் அணி நிர்​வாகி​கள் சந்​திப்பு நிகழ்ச்சி நேற்று நடை​பெற்​றது. தனுஷை வரவேற்று கல்​லூரி வளாகம் முழு​வதும் வண்​ணமய​மான வரவேற்பு பதாகைகள், கட்-அவுட்​கள் வைக்​கப்​பட்​டிருந்​தன. ‘பெண்​களின் குரல் உயர்ந்​தால்​தான் சமூகத்​தின் எதிர்​காலமும் உயரும்’, ‘எங்​கள் அன்​பின் அண்​ணன் தனுஷ், எங்​கள் தலை​வரே’ என்​பது போன்ற வாசகங்​கள் அவற்றில் இடம்​பெற்​றிருந்​தன.

தமிழகம் முழு​வதும் இருந்து 5,000-க்​கும் மேற்​பட்ட பெண்​கள் இதில் பங்​கேற்​றதாக கூறப்​படு​கிறது. சிக்​கன் பிரியாணி மதிய விருந்தாக அளிக்​கப்​பட்​டது. அனைவருக்​கும் ஒரு வெள்ளி காமாட்சி விளக்​கும் பரிசாக வழங்​கப்​பட்​டது.

வேட்டி, சட்டை அணிந்து நிகழ்ச்​சி​யில் பங்​கேற்ற தனுஷ், பெண்​களை சந்​தித்து கலந்​துரையாடினார். “அனைவரை​யும் சந்​தித்​ததில் மகிழ்ச்சி. அனைவரும் நன்கு படித்து வாழ்க்​கை​யில் வெற்றி பெற வேண்​டும்” என்று மாணவர்களுக்கும் அறிவுறுத்தினார். நிகழ்ச்​சி​யின்​போது ஒரு பாடலும் பாடியுள்​ளார். நிறைவாக, மகளிர் அணி நிர்​வாகி​களு​டன் புகைப்​படம் எடுத்​துக்​கொண்​டார்.

மகளிர் அணி நிர்வாகிகளுடன் தனுஷ் கலந்துரையாடல்: 3,000 பேருக்கு விருந்து
கனமழை எச்சரிக்கை: புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in