

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவுக்கும் டெல்லியைச் சேர்ந்த பாயல் நாத்துக்கும் கடந்த 1994-ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஜமிர், ஜாஹிர் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்த சூழலில் கருத்து வேறுபாடு காரணமாக இந்த தம்பதியினர் கடந்த 2009-ம் ஆணடு முதல் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதையடுத்து,இந்த தம்பதிக்கு விவாகரத்து வழங்கி உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.
விவாகரத்து பெற்ற 3 மாதங்களுக்கு பிறகு முதல்வர் உமர் அப்துல்லா (56), பத்திரிகையாளரான நிதி ரஸ்தானை (49) 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் நேற்று முன்தினம் நடைபெற்றது. தனது திருமணம் குறித்த செய்தியை உமர் அப்துல்லா நேற்று சமூக வலைதளங்களில் அறிவித்தார். நிதி ரஸ்தானுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, “நேற்று ஒரு புதிய பயணம் தொடங்கியது” என குறிப்பிட்டார்.