ஒடிசா நிலச்சரிவில் 12 பேர் மாயம்: மீட்புப் பணியில் 170 வீரர்கள்

ஒடிசா நிலச்சரிவில் 12 பேர் மாயம்: மீட்புப் பணியில் 170 வீரர்கள்
Updated on: 
1 min read

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் வீசிய 'அர்னப்' புயல் காரணமாக பெய்த கனமழையால் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள கிடிபபாலி கிராமத்தில் நேற்று முன்தினம் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 12 பேர் மாயமாகியுள்ளனர்.

தேசியப் பேரிடர் மீட்புப் படை, ஒடிசா பேரிடர் விரைவு நடவடிக்கைப் படை, சிறப்பு நடவடிக்கைக் குழு ஆகியவற்றைச் சேர்ந்த 170 பேர் மீட்புப் பணியில் உள்ளதாகச் சிறப்பு நிவாரண ஆணையர் ராஜேஷ் பி. பாட்டீல் தெரிவித்தார்.

அவர் செய்தியாளர்களின் சந்திப்பின்போது கூறும்போது, "மலை உச்சியில் உள்ள கிடிபபாலி கிராமத்தில் 26 பேர் வசித்து வந்தனர். அவர்களில் 13 பேர் நிலச்சரிவிலிருந்து தப்பினர்.

மற்ற 13 பேர் காணாமல் போயினர். அவர்களில் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். மற்றவர்களைப் பற்றிய தகவல் இல்லை. வெள்ளிக்கிழமை இரவு முதல் தேடும் பணி நடந்து வருகிறது" என்றார்.

ஒடிசா நிலச்சரிவில் 12 பேர் மாயம்: மீட்புப் பணியில் 170 வீரர்கள்
‘மடியில் அமர்ந்து, கைகளைப் பற்றியபடி…’ - இந்திரா நினைவு தினத்தில் ராகுல் உருக்கம்

X