‘டெல்லியில் ஜாலியன் வாலாபாக் போன்று கொடூர தாக்குதல்’ - சிஜேபி போராட்டக்காரர்கள் குற்றச்சாட்டு

கேஜ்ரிவாலும் சரமாரி தாக்கு
‘டெல்லியில் ஜாலியன் வாலாபாக் போன்று கொடூர தாக்குதல்’ - சிஜேபி போராட்டக்காரர்கள் குற்றச்சாட்டு
Updated on
1 min read

புதுடெல்லி: நா​டாளு​மன்ற பேரணி​யின்​போது ஜாலியன் வாலாபாக் போன்று கொடூர தாக்​குதல் நடத்​தப்​பட்​டது என்று கரப்பான்​பூச்சி ஜனதா கட்சியை (சிஜேபி) சேர்ந்த போராட்டக்​காரர்​கள் குற்​றம் சாட்டி உள்​ளனர்.

நீட் தேர்வு முறைகேட்​டுக்கு பொறுப்​பேற்று மத்​திய கல்வி அமைச்சர் தர்​மேந்​திர பிர​தான் பதவி வில​கக் கோரி சிஜேபி சார்பில் நேற்று முன்​தினம் நாடாளு​மன்​றம் நோக்கி பேரணி நடத்தப்​பட்​டது. இதில் ஆயிரக்​கணக்​கானோர் பங்​கேற்​றனர். அப்போது போராட்​டக்​காரர்​களை கலைக்க டெல்லி போலீ​ஸார் தடியடி நடத்​தி, கண்​ணீர் புகைக்​குண்​டு​களை வீசினர். இதில் 100-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர்.

பேரணியில் பங்கேற்ற ஹைத​ரா​பாத்தைச் சேர்ந்த விஜய் டேனியல் கூறும்போது, “சோனம் வாங்​சுக்​கின் மனைவி கீதாஞ்​சலி உடன் பேருந்​தில் பயணம் செய்​தேன். அந்த பேருந்​துக்​குள் போலீ​ஸார் ஏறி எங்​கள் மீது தாக்​குதல் நடத்​தினர். பேருந்​தில் இருந்து வலுக்​கட்​டாய​மாக கீழே இறக்​கப்​பட்​டோம். இரு​புறத்​தில் இருந்​தும் போலீ​ஸார் தடியடி நடத்​தினர். அவர்​களிடம் இருந்து தப்​பிக்க போராட்ட மேடைக்கு அடி​யில் பதுங்​கினேன்.

காயமடைந்​தவர்​களுக்கு சிகிச்சை அளிக்க வந்த மருத்​து​வர் உட்பட பலரும் மேடைக்கு அடி​யில் பதுங்கி இருந்​தனர். ஆனால் போலீ​ஸார் எங்​களை வெளியே இழுத்து தாக்​குதல் நடத்​தினர். எனக்கு கழுத்​தில் பலத்த அடி விழுந்​தது. ஜாலியன் வாலா​பாக் போன்று மிகக் கொடூரமாக தாக்​குதல் நடத்​தப்​பட்​டது” என்றார்.

டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறும் போது, “1919-ல் ஜாலியன்வாலா பாக்கில் அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்ட பிரிட்டிஷ் அதிகாரி ஜெனரல்டயரின் கொடூரத்தையே மோடி மிஞ்சிவிட்டார் என்று தோன்றுகிறது” என்றார்.

டெல்லி போலீஸ் தரப்​பில் கூறும்போது, “நாடாளு​மன்ற பேரணிக்கு அனு​மதி வழங்​கப்​பட​வில்​லை. சட்​ட​விரோத​மாக கூடிய போராட்​டக்​காரர்​களை தடுத்து நிறுத்​தினோம். சுமார் 35,000 பேர் கூடு​வார்​கள் என்று கணித்​திருந்​தோம். ஆனால் அதை​விட இரு​மடங்கு கூட்​டம் கூடியது.

சுமார் 2,000 போலீ​ஸார் மற்​றும் மத்​திய பாது​காப்பு படைகளை சேர்ந்த 20 கம்​பெனி வீரர்​கள் மூலம் பேரணி தடுத்து நிறுத்​தப்​பட்​டது. போலீஸ் தரப்​பில் மூத்த அதி​காரி​கள் உட்பட 118 பேர் காயமடைந்​துள்​ளனர். 70 பேரிடம் தொடர் விசா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது. சட்​டம், ஒழுங்கை மீறிய​தாக பல்​வேறு வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்டு உள்​ளன. சிசிடிவி கேமரா பதிவு​களை ஆய்வு செய்து வரு​கிறோம்​” என்றனர்.

‘டெல்லியில் ஜாலியன் வாலாபாக் போன்று கொடூர தாக்குதல்’ - சிஜேபி போராட்டக்காரர்கள் குற்றச்சாட்டு
பிரதமர் இல்லத்தின் முன்பு ராகுல் திடீர் போராட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in