மக்கள் பிரச்சினைகளை எழுப்பியது குற்றமா? - ஆம் ஆத்மி தலைமையிடம் ராகவ் சத்தா கேள்வி

மக்கள் பிரச்சினைகளை எழுப்பியது குற்றமா? - ஆம் ஆத்மி தலைமையிடம் ராகவ் சத்தா கேள்வி
Updated on
1 min read

புதுடெல்லி: நா​டாளு​மன்​றத்​தில் மக்​கள் நலன் சார்ந்த பிரச்​சினை​களை எழுப்​பியது குற்​றமா என்று ஆம் ஆத்மி தலை​மை​யிடம் ராகவ் சத்தா கேள்வி எழுப்பி உள்​ளார்.

ஆம் ஆத்​மி​யின் இளம் தலை​வர்​களில் ஒரு​வ​ரான ராகவ் சத்​தா, அந்த கட்​சி​யின் மாநிலங்​களவை துணைத் தலை​வ​ராக பதவி வகித்து வந்​தார். அந்த பதவி​யில் இருந்து நேற்று முன்​தினம் அவர் நீக்​கப்​பட்​டார். அவருக்​குப் பதிலாக புதிய துணைத் தலை​வ​ராக அசோக் மிட்​டலை ஆம் ஆத்மி தலைமை நியமித்து உள்​ளது.

ஆம் ஆத்மி தேசிய ஒருங்​கிணைப்​பாளர் அர்​விந்த் கேஜ்ரி​வால் கடந்த 2024-ம் ஆண்​டில் கைது செய்​யப்​பட்​ட​போது கட்​சி​யின் சார்​பில் பல்​வேறு போராட்​டங்​கள் நடை​பெற்​றன. இதில் ராகவ் சத்தா பங்​கேற்​க​வில்​லை. கடந்த பிப்​ர​வரி​யில் மது​பான கடைகள் ஒதுக்​கீட்டு வழக்​கில் இருந்து அவர் விடு​தலை செய்​யப்​பட்​டார்.

இதுதொடர்​பாக​வும் ராகவ் சத்தா எவ்​வித கருத்​தை​யும் தெரிவிக்​க​வில்​லை. நாடாளு​மன்​றத்​தில் ஆம் ஆத்மி சார்​பான கருத்​துகளை அவர் எடுத்​துரைக்​க​வில்​லை. இதன் ​காரண​மாகவே மாநிலங்​களவை துணைத் தலை​வர் பதவி​யில் இருந்து அவர் நீக்​கப்​பட்​டார் என்று கட்சி வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

இதுகுறித்து ராகவ் சத்தா நேற்று வெளி​யிட்ட வீடியோ​வில் கூறி​யிருப்​ப​தாவது: மாநிலங்​களவை​யில் மக்​கள் நலன் சார்ந்த பிரச்​சினை​களை எழுப்​பினேன். இது ஒரு குற்​ற​மா? அவை​யில் நான் பேசக்​கூ​டாது என்று ஆம் ஆத்மி சார்​பில் மாநிலங்​களவை செய​லா​ளரிடம் கடிதம் அளிக்​கப்​பட்டு உள்​ளது. நான் சாமானிய மக்​களுக்​காக குரல் கொடுக்​கிறேன். நான் பேசக்​கூ​டாது என்று தடுப்​பது ஏன்?

விமான நிலை​யங்​களில் கூடு​தல் விலைக்கு உணவு பொருட்​கள் விற்​பனை செய்​யப்​படு​கின்​றன. டெலிவரி ஊழியர்​கள் பல்​வேறு பிரச்​சினை​களை சந்​தித்து வரு​கின்​றனர். உணவு பொருட்​களில் கலப்​படம் அதி​கரித்து வரு​கிறது. சுங்​கச்​சாவடி கொள்ளை முதல் வங்​கிக் கொள்ளை வரை அனைத்து பிரச்​சினை​களை​யும் மாநிலங்​களவை​யில் எழுப்பி வரு​கிறேன்.

தொலைத்​தொடர்பு நிறு​வனங்​கள் ஓராண்​டில் 12 மாதங்​களுக்​குப் பதில் 13 மாதங்​களுக்​கான கட்​ட​ணத்தை மக்​களிடம் வசூலிக்கின்றன. ரீசார்ஜ் செய்​ய​வில்லை என்​றால் அழைப்​பு​கள் நிறுத்தப்படு​கின்​றன. இது​போன்ற மக்​கள் நலன் சார்ந்த பிரச்​சினை​களுக்​காக தொடர்ந்து குரல் எழுப்பி வரு​கிறேன். இதனால் ஆம் ஆத்​மிக்கு என்ன பாதிப்பு ஏற்​பட்​டது. எனது குரலை ஒடுக்க சிலர் விரும்புகின்​றனர். எனது மவுனத்தை தோல்​வி​யாக கருத வேண்​டாம். நான் நதி போன்​றவன். நான் ஆர்ப்​பரித்​தால் மிகப்​பெரிய வெள்ளப்​பெருக்கு ஏற்​படும். இவ்​வாறு ராகவ் தெரி​வித்​துள்​ளார்.

மக்கள் பிரச்சினைகளை எழுப்பியது குற்றமா? - ஆம் ஆத்மி தலைமையிடம் ராகவ் சத்தா கேள்வி
சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்களின் மறைவிடத்தில் ரூ.11 கோடி மதிப்பிலான சுவிஸ் தங்க கட்டிகள் பறிமுதல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in