மூன்றாவது அணி அமைக்க திமுக அச்சாரமா? - தாக்கரே, பவாரை அடுத்து மம்தாவை சந்தித்த எம்.பி. கனிமொழி

மூன்றாவது அணி அமைக்க திமுக அச்சாரமா? - தாக்கரே, பவாரை அடுத்து மம்தாவை சந்தித்த எம்.பி. கனிமொழி
Updated on
1 min read

புதுடெல்லி: பாஜக, காங்​கிரஸ் அல்​லாத 3-வது அணியை அமைக்க திமுக அச்​சா​ரமிடு​வ​தாகத் தெரி​கிறது. உத்தவ் தாக்கரே மற்​றும் சரத்​ப​வாரை சந்​தித்த எம்.பி. கனிமொழி, திரிணமூல் காங்கிரஸ் நிறு​வனர் மம்தா பானர்ஜியை​யும் சந்​தித்துள்ளார்.

நாடாளு​மன்ற தேர்​தலுக்கு இன்​னும் 3 ஆண்​டு​கள் உள்​ளன. இச்சூழலில், மீண்​டும் தேசிய அரசி​யலில் 3-வது அணிக்​கான பேச்சு தொடங்​கி​விட்​டது. இது, பாஜக மற்​றும் காங்​கிரஸ் அல்​லாத பிராந்​தி​யக் கட்​சிகள் ஒன்​றிணைந்து அமைப்​ப​தாக இருக்​கும்.

இந்த முறை அதற்​கான அடித்​தளம் அமைப்​ப​தில் முதன் முறையாக திமுக இறங்கி உள்​ளது. இதன்​மூலம், தேசிய அரசியலில் தனது பங்கை திமுக மறு​வரையறை செய்ய முயற்சிப்​ப​தாகக் கருதப்​படு​கிறது.

இதற்​கான பொறுப்பை திமுக​வின் துணைப் பொதுச்​செயலாளரான கனி​மொழி ஏற்​றுள்​ள​தாகத் தகவல் வெளி​யாகி உள்​ளது. கடந்த 2007-ல் முதன்​முறையாக மாநிலங்​களவை எம்.பி.யாக அமர்த்​தப்​பட்​டார். அப்​போது முதல் அவரது நட்பு தேசிய தலை​வர்​களிடம் உரு​வாகி வளர்ந்​துள்​ளது.

தற்​போது, தூத்துக்​குடி மக்​களவை தொகுதி எம்​பி​யாக இருப்​பவருக்​கு, தேசிய அரசி​யல் கூட்​டங்​களி​லும் முக்​கியப் பங்கு இருந்து வருகிறது. இதனால், எம்.பி. கனி​மொழியே இந்த பணிக்கு பொருத்​த​மானவர் என திமுக கரு​தி​யுள்​ளது.

கடந்த சில கால​மாகவே பல முக்​கிய பிராந்​தி​யத் தலை​வர்​களை கனி​மொழி சந்​தித்து வரு​கிறார். கடந்த 12-ல் மும்பை சென்​றவர் சிவசேனா யுபிடி கட்​சித் தலை​வ​ரான உத்​தவ் தாக்​கரேவைச் சந்தித்​தார். இது, தொகுதி மறுசீரமைப்​பிற்​கான​தாக தாக்​கரே தரப்​பில் கூறப்​பட்​டது.

அதே​போல், தேசி​ய​வாதக் காங்​கிரஸ் கட்சியின் நிறு​வனர் சரத்​ப​வாரை​யும் எம்.பி.கனி​மொழி சந்தித்துள்​ளார். இதற்​கு, சரத்​ப​வாரின் மகளான எம்.பி. சுப்​ரியா சுலே​வின் உற்ற தோழி கனி​மொழி என்​பது சுட்​டிக் காட்​டப்​பட்​டது.

இந்​நிலை​யில், நேற்​று​முன்​தினம் கொல்​கத்தா சென்று டிஎம்சி நிறு​வனர் மம்​தாவை​யும் கனி​மொழி சந்​தித்​துள்​ளார். இந்த சந்திப்பு சுமார் ஒன்​றரை மணி நேரம் நடை​பெற்​றுள்​ளது.

கொல்கத்​தா​விலிருந்து கனி​மொழி நேரடி​யாக டெல்லி சென்றுள்ளார். இந்த சந்​திப்பு தொடர்​பான தகவல்​கள் இன்​னும் வெளி​யாக​வில்​லை.

இதையடுத்​து, மேலும் சில பிராந்​தி​யக் கட்​சிகளின் தலைவர்களை கனி​மொழி சந்​திக்​கத் திட்​ட​மிட்​டிருப்​ப​தாகத் தெரிகிறது. இந்த சந்​திப்​பு​கள் அனைத்​தும் அதி​காரபூர்​வ​மாக அறிவிக்கப்படவில்​லை.

எனவே, இவை அனைத்​தும் தேசிய அரசியலில் ஒரு ரகசிய​மான சந்​திப்​பாக​வும் கருதப்​படு​கிறது. இதன் காரண​மாக, இது மூன்​றாவ​தாக ஒரு புதிய கூட்​ட​ணியை அமைப்​ப​தற்​கான முயற்​சி​யாக இருக்​கலாம் என்று கருதப்படுகிறது.

தமிழகத்​தில் விஜய் தலை​மையி​லான தவெக ஆட்சி அமைந்​தது முதல், காங்​கிரஸ் மற்​றும் திமுக இடையே கருத்து வேறு​பாடு​கள் நில​வு​கின்​றன. இதனால், தமிழகத்​தில் எதிர்​கட்​சி​யாகி விட்ட திமுக​விற்​கு, தேசிய அளவில் ஒரு பலம் அவசி​ய​மாகிறது. இதற்காக, மத்​தி​யில் தலைமை ஏற்​றுள்ள பாஜக​வுடன் திமுக நட்பு பேச்​சுக்​கள் எழுந்​தன. இது தமிழகத்​திற்கு பொருத்​த​மாக இருக்காது என்ற நிலை​யில், தற்​போது, 3-வது அணிக்​கான முயற்சியைத் தொடங்கி இருப்​ப​தாக​ தெரி​கிறது.

image-fallback
இரட்டைக் கொலையை கண்டித்து சாலை மறியல்: காளையார்கோவிலில் போலீஸார் தடியடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in