உ.பி.யில் பாஜக ஆட்சியில் முதலீட்டாளர்களின் நம்பிக்கை மீட்கப்பட்டுள்ளது: முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதம்

உ.பி.யில் பாஜக ஆட்சியில் முதலீட்டாளர்களின் நம்பிக்கை மீட்கப்பட்டுள்ளது: முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதம்
Updated on
1 min read

லக்னோ: ‘உத்தர பிரதேசம் ஜவுளி மாநாடு-2026’ தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறிய​தாவது: உத்​தர பிரதேசத்​தில் இன்று சட்டத்​தின் ஆட்சி நடை​பெறுகிறது.

குற்​றம், குற்​ற​வாளி​கள் மற்​றும் ஊழலுக்கு எதி​ராக ‘பூஜ்ய சகிப்​புத்​தன்​மை’ கடைப்​பிடிக்​கப்​படு​கிறது. உத்​தர பிரதேசம் ஊரடங்கு இல்​லாத, கலவரம் இல்​லாத, மாஃபி​யாக்​கள் இல்​லாத மாநில​மாக மாறி​யுள்​ளது. இதனால், கடந்த ஒன்​பது ஆண்​டு​களில் ரூ.50 லட்​சம் கோடி மதிப்பிலான முதலீட்டு முன்​மொழி​வு​கள் பெறப்​பட்​டுள்​ளன. இதில் ரூ.15 லட்​சம் கோடி மதிப்​பிலான திட்​டங்​கள் செயல்பாட்டிற்கு வந்​துள்​ளன. மேலும் ரூ.7.5 லட்​சம் கோடி மதிப்பிலான திட்​டங்​கள் அமல்​படுத்​தத் தயா​ராக உள்​ளன.

65 லட்​சத்​திற்​கும் அதி​க​மான இளைஞர்​களுக்கு வேலை​வாய்ப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது. பெரிய தொழிற்​சாலைகளின் எண்​ணிக்கை 14,000-லிருந்து 35,000-ஆக உயர்ந்​துள்​ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக மாநிலம் உபரி வரு​வாய் கொண்​ட​தாக மாறியுள்ளதுடன், முதலீட்​டாளர்​களுக்கு அளித்த வாக்​குறு​தி​கள் 100 சதவீதம் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளது. எனது அலு​வல​கமே இதனை நேரடி​யாக கண்​காணிக்​கிறது. இவ்​வாறு அவர் கூறி​னார்​.

உ.பி.யில் பாஜக ஆட்சியில் முதலீட்டாளர்களின் நம்பிக்கை மீட்கப்பட்டுள்ளது: முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதம்
திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தடை நீட்டிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in