ராமர் கோயில் நன்கொடையில் மோசடி குறித்து விசாரணை: அறக்கட்டளை தலைவர் மகந்த் வலியுறுத்தல்

ராமர் கோயில் நன்கொடையில் மோசடி குறித்து விசாரணை: அறக்கட்டளை தலைவர் மகந்த் வலியுறுத்தல்
Updated on
1 min read

அயோத்தி: ராமர் கோயில் நன்​கொடை விவ​காரத்​தில் எழுந்துள்ள குற்​றச்​சாட்டு குறித்து நடுநிலை​யான விசா​ரணை நடத்தப்பட வேண்​டும் என்று கோயில் அறக்கட்டளை தலை​வர் மகந்த் கமல் நியாயன் தாஸ் வலி​யுறுத்தி உள்​ளார்.

உத்​தரபிரதேச மாநிலம் அயோத்​தி​யில் உள்ள அயோத்தி ராமர் கோயிலுக்கு வழங்​கப்​பட்ட நன்​கொடை​யில் பல கோடி ரூபாய் காணா​மல் போன​தாக தகவல் கிடைத்​துள்​ளது என்று சமாஜ்​வாதி கட்​சித் தலை​வர் அகிலேஷ் யாதவ் குற்​றம் சாட்டியுள்​ளார். மேலும், இந்த விவ​காரத்தை நீதி​மன்​றம் தனது கவனத்​தில் எடுத்துக் கொண்டு விசா​ரிக்க வேண்​டுமென அவர் வலியுறுத்தினார்.

இந்​நிலை​யில், இது உறு​திப்​படுத்​தப்​ப​டாத தகவல் என்​றும், தற்போது தணிக்கை செய்​யும் பணி​கள் நடை​பெற்று வருவதாகவும் ராம ஜென்​மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்​கட்​டளை​யின் பொதுச் செய​லா​ளர் சம்​பத் ராய் தெரி​வித்​துள்​ளார்.

இதனிடையே நேற்று கோயில் அறக்​கட்​டளை தலை​வர் மகந்த் கமல் நியாயன் தாஸ் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: ராமர் கோயிலுக்கு பக்​தர்​கள் அளித்த நன்​கொடைகளில் எந்​த​வித முறை​கேடும் நடை​பெற​வில்​லை. அப்​படி, ராமர் கோயில் நன்​கொடைகளில் ஏதேனும் முறை​கேடு நடந்​த​தாகக் கூறப்​பட்​டால் அது குறித்து நடுநிலை​யான விசா​ரணை நடத்​தப்பட வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

இதுகுறித்து பாஜக மூத்த தலை​வரும், மத்​திய அமைச்​சரு​மான பியூஷ் கோயல் கூறும்​போது, “ராமர் கோயில் நன்​கொடை விவகாரத்​தில் சமாஜ்​வாதி கட்​சித் தலை​வர் அகிலேஷ் யாதவ் கூறி​யுள்ள குற்​றச்​சாட்​டு​களை மக்​கள் நம்​பத் தயா​ராக இல்​லை. உ.பி.​யில் கடந்த கால சமாஜ்​வாதி கட்சி ஆட்​சி​யின்​போது வளர்ச்சி இல்​லாமல் இந்த மாநிலம் வெகு​வாகப் பாதிக்​கப்​பட்​டது” என்​றார்​.

ராமர் கோயில் நன்கொடையில் மோசடி குறித்து விசாரணை: அறக்கட்டளை தலைவர் மகந்த் வலியுறுத்தல்
திக்குமுக்காடும் திரிணமூல் காங்கிரஸ்... மம்தா திணறுவது ஏன்?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in