எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி அருகே பாகிஸ்தானின் உளவு ட்ரோனை சுட்டு வீழ்த்தியது ராணுவம்

எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி அருகே பாகிஸ்தானின் உளவு ட்ரோனை சுட்டு வீழ்த்தியது ராணுவம்
Updated on
1 min read

ஜம்மு: ஜம்​மு​வில் உள்ள எல்​லைக் கட்​டுப்​பாட்டு பகுதி அருகே கண்​காணிப்பு நடவடிக்​கைகளை பாகிஸ்தான் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்​நிலை​யில் ஜம்​மு​வின் கூர் பகு​தி​யில் உள்ள எல்​லைக் கட்​டுப்​பாட்டு பகுதி அருகே ட்ரோன் ஒன்று பறந்து வந்​தது. அதை அப்​பகு​தி​யில் பாது​காப்​புக்கு நின்​றிருந்த ராணுவத்தினர் சுட்டு வீழ்த்​தினர். உடைந்த ட்ரோனில் இருந்து 64 ஜிபி மெமரி கார்டு ஒன்று மீட்​கப்​பட்​டது.

அதை தடய​வியல் பரிசோதனைக்கு உட்​படுத்​தி​ய​போது, எல்​லைக் கட்​டுப்​பாட்டு பகுதி அருகே இந்​திய ராணுவத்​தினர் முகாமிட்டிருக்​கும் பகு​தி​களின் வீடியோக்​கள் மற்​றும் படங்​கள் பதி​வாகி​யிருந்​தன. இந்த ட்ரோன் சீனா தயாரிப்பு என நம்பப்படுகிறது. இதில் கேம​ராக்​கள் பொருத்​தப்​பட்​டிருந்​தன.

இந்த ட்ரோன் பறந்து வந்த பாதை, யார் எங்கே இருந்து இயக்கியது போன்ற தகவல்​கள் ஆராயப்​பட்டு வரு​கின்​றன. இச்சம்​பவத்​தையடுத்து எல்​லைக் கட்​டுப்​பாட்டு பகு​தி​யில் கண்காணிப்​பு​கள் தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

இந்​திய வான் எல்லைப் பகு​தி​யில் பறந்து உளவு பார்க்​கும் முயற்​சி​யில் பாகிஸ்தான் ஈடுபட்​டால் தக்க பதிலடி கொடுப்​போம் என ராணுவம்​ எச்சரித்துள்ளது.

எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி அருகே பாகிஸ்தானின் உளவு ட்ரோனை சுட்டு வீழ்த்தியது ராணுவம்
“சொந்த துறையின் அதிகாரப்பூர்வ அறிக்கையே அமைச்சர் நிர்மல் குமாருக்கு தெரியவில்லை” - சிவசங்கர் தாக்கு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in