விசா புதிய விதிகள் மாணவர்களை பாதிக்கும்: அமெரிக்காவிடம் இந்தியா கவலை

விசா புதிய விதிகள் மாணவர்களை பாதிக்கும்: அமெரிக்காவிடம் இந்தியா கவலை
Updated on
1 min read

புதுடெல்லி: அமெரிக்காவின் உள்​நாட்டு பாது​காப்​புத் துறை (டிஹேச்​எஸ்) புதிய விசா விதி​முறை​களை வெளி​யிட்​டுள்​ளது. அதன்​படி, வெளி​நாட்டு மாணவர்​களுக்​கான ‘எப்’ விசா, கலாச்​சார பரி​மாற்ற திட்​டங்​களில் வருபவர்​கள் அமெரிக்​கா​வில் வேலை செய்ய அனு​ம​திக்​கும் ‘ஜெ’ விசா மற்​றும் ஊடகவியலாளர்களுக்கான ‘ஐ’ விசா ஆகிய​வற்​றுக்கு குறிப்​பிட்ட கால வரம்பு நிர்​ண​யிக்​கப்​படும்.

புதிய விதி​முறை​களின் கீழ், மாணவர் மற்​றும் கலாச்​சார பரிமாற்ற விசாக்​களின் காலம் 4 ஆண்​டு​களுக்கு மேல் இருக்​காது. ஓராண்​டாக இருந்த ஐ விசா கால வரம்பு 240 நாட்​களாகக் குறைக்கப்​பட்​டுள்​ளது. இந்த புதிய விதி​முறை​கள், நாடாளு​மன்ற மறு ஆய்​வுக்கு உட்​பட்​டு, ஃபெடரல் பதிவேட்​டில் வெளி​யிடப்​பட்ட 60 நாட்​களில் நடை​முறைக்கு வரும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இதற்கு முன்​பு, எப், ஜெ விசாக்​களில் வருபவர்​கள் தங்​களு​டைய படிப்பு அல்​லது ஆராய்ச்சி முடி​யும் வரை டூரேஷன் ஆப் ஸ்டேட்டஸ் என்ற அனு​ம​தி​யின் கீழ் அமெரிக்​கா​வில் தங்க முடியும். இதற்​குத்​தான் இப்​போது கட்​டுப்​பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்​நிலை​யில், அமெரிக்கா செல்​லும் உண்​மை​யான பயணி​கள் மற்​றும் மாணவர்​கள் எதிர்​கொள்​ளும் சிரமங்​கள் குறித்த பிரச்​சினை​களை அமெரிக்​கா​விடம் இந்​தியா தொடர்ந்து எடுத்துரைத்து வரு​வ​தாக மத்​திய வெளி​யுறவு அமைச்சக செய்தித் தொடர்​பாளர் ரந்​திர்​ ஜெய்​ஸ்​வால்​ தெரிவித்​துள்​ளார்​.

விசா புதிய விதிகள் மாணவர்களை பாதிக்கும்: அமெரிக்காவிடம் இந்தியா கவலை
மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in