ம.பி.யில் பாசிப்பயறு கொள்முதல் உயர்வு: விவசாயிகள் போராட்டம் வாபஸ்

ம.பி.யில் பாசிப்பயறு கொள்முதல் உயர்வு: விவசாயிகள் போராட்டம் வாபஸ்
Updated on
1 min read

போபால்: தகு​தி​யுள்ள விவ​சா​யிகளிடம் இருந்து பாசிப்​பயறு கொள்​முதலை 60 சதவீத​மாக உயர்த்​த​வும், உர விநியோகத்திற்கான ‘இ-டோக்​கன்’ முறையைத் தற்​காலிக​மாக நிறுத்தி வைக்​க​வும் மத்​தி​ய பிரதேச அரசு ஒப்​புக் கொண்​டதைத் தொடர்ந்​து, போபாலில் விவ​சா​யிகள் நடத்தி வந்த தீவிர போராட்டம் வாபஸ் பெறப்​பட்​டுள்​ளது.

பாசிப்​பயறு கொள்​முதல் தொடர்​பாக மத்​திய விவ​சா​யத் துறை அமைச்​சர் சிவ​ராஜ் சிங் சவு​கானின் இல்​லத்தை முற்​றுகை​யிட்ட ஆயிரக்​கணக்​கான ம.பி. விவ​சா​யிகள், முதல்​வர் மோகன் யாதவின் வீட்டை நோக்​கி​யும் பேரணி​யாகச் செல்ல முயன்​றனர். இதையடுத்​து, தலை​மைச் செயல​கத்​தில் அரசுப் பிரதிநிதிகளுக்கும் விவ​சாய சங்​கத் தலை​வர்​களுக்​கும் இடையே நடந்த பேச்​சு​வார்த்​தை​யில் சுமுகத் தீர்வு எட்​டப்​பட்​டது.

அதன்​படி, நர்​ம​தாபுரம், சேஹோர், ஹர்டா உள்​ளிட்ட மாவட்டங்களில் பாசிப்​பயறு உற்​பத்தி செய்​யும் விவ​சா​யிகளின் நலன் கரு​தி, கொள்​முதல் வரம்பு 25 சதவீதத்​தில் இருந்து 60 சதவீதமாக உடனடி​யாக உயர்த்​தப்​பட்​டது. மேலும், பாசிப்​பயறு கொள்​முதலுக்​கான கடைசி தேதி ஆகஸ்ட் 10-லிருந்து ஆகஸ்ட் 20 வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது.

உர விநி​யோகத்​தில் உள்ள நடை​முறைச் சிக்​கல்​களை ஆராய ஒரு குழு அமைக்​கப்​படும். அக்​குழு அறிக்கை சமர்ப்​பிக்​கும் வரை உர விநி​யோகத்​திற்​கான இ-டோக்​கன் முறை உடனடி​யாக இடைநிறுத்​தம் செய்​யப்​படு​கிறது என மாநில விவ​சா​யத் துறை அமைச்​சர் ஐதல் சிங் கன்​சானா தெரி​வித்​தார். இதையடுத்து விவசா​யிகளின் போ​ராட்​டம்​ வாபஸ்​ பெறப்​பட்​டுள்​ளது.

ம.பி.யில் பாசிப்பயறு கொள்முதல் உயர்வு: விவசாயிகள் போராட்டம் வாபஸ்
போலி பாஸ்போர்ட் வழக்கில் பிரபல தாதா சோட்டா ராஜனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in