போலி பாஸ்போர்ட் வழக்கில் பிரபல தாதா சோட்டா ராஜனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

சோட்டா ராஜன்- கோப்புப் படம்
சோட்டா ராஜன்- கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: மும்​பையைச் சேர்ந்த பிரபல தாதாவான சோட்டா ராஜன், சர்​வ​தேச அளவில் பிரபல​மான தாவூத் இப்​ராகி​முடன் இணைந்து இந்​தியா உள்பட பல்​வேறு நாடு​களில் சட்​ட​விரோத செயல்​களில் ஈடுபட்டு வந்​தார். கடந்த 1993-ல் தாவூத் இப்​ராகி​முடன் ஏற்​பட்ட கருத்து வேறு​பாடு காரண​மாக தனி​யாக பிரிந்து தனி அணி​யாக செயல்​பட்டு வந்த சோட்டா ராஜன் மீது நாடு முழு​வதும் 50-க்​கும் மேற்​பட்ட கொலை மற்​றும் கொலை முயற்சி உள்​ளிட்ட வழக்​கு​கள் உள்​ளன.

27 ஆண்​டு​கால​மாக போலீஸ் பிடி​யில் சிக்​காமல் இருந்த சோட்டா ராஜன், இன்​டர்​போல் போலீ​ஸாரின் உதவி​யுடன் கடந்த 2015-ம் ஆண்டு இந்​தோ​னேஷி​யா​வின் பாலிதீவில் அந்​நாட்டு போலீ​ஸா​ரால் கைது செய்​யப்​பட்டு இந்​தி​யா​வுக்கு கொண்​டு​வரப்​பட்​டார். தற்​போது டெல்லி திஹார் சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார்.

மத்​திய மும்பை ஹாம்​தேவி பகு​தி​யில் தனி​யார் ஓட்​டல் உரிமை​யாளரை கொலை செய்த வழக்கு மற்​றும் ஒரு செய்​தி​யாளரை கொலை செய்த வழக்கு போன்​றவற்​றில் சோட்டா ராஜனுக்கு ஆயுள் தண்​டனை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், கடந்த 2002-ம் ஆண்டு சென்​னை​யில் விஜய கதம் என்ற பெயரில் ஆள்​மாறாட்​டம் செய்து போலி ஆவணங்​கள் மூலம் பாஸ்​போர்ட் பெற்​றுள்​ள​தாக சோட்டா ராஜன் மீது சென்னை சிபிஐ போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​தனர்.

இந்த வழக்கு சென்னை எழும்​பூரில் உள்ள கூடு​தல் பெருநகர குற்​ற​வியல் நடு​வர் நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் இருந்து வந்​தது. இந்​நிலை​யில், இந்த வழக்கை விசா​ரித்த நீதி​மன்​றம், சோட்டா ராஜனுக்கு 7 ஆண்டு சிறை தண்​டனை, ரூ.55 ஆயிரம் அபராதம் வி​தித்து தீர்ப்​பளித்​துள்​ளது.

சோட்டா ராஜன்- கோப்புப் படம்
செந்தில் பாலாஜியைத் தேடுகிறது போலீஸ்: டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in