புதுடெல்லி: கருவில் பாலினம் கண்டறிவதைத் தடுக்கும் சட்டம் 1994ல் அமலுக்கு வந்தது. ஆனால், 0-6 வயதுக் குழந்தைகளின் பாலின விகிதம் 2001ல் ஆயிரம் ஆண்களுக்கு 927 பெண்கள் என்பதிலிருந்து 2011ல் 918-ஆகக் குறைந்தது. இதையடுத்து, பெண் குழந்தைகள் குறித்த மனப்பான்மையை மாற்ற, 2015ல் பிரதமர் மோடி 'பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ' திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இத்திட்டம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், இத்திட்டம் முதலில் செயல்படுத்தப்பட்ட மாவட்டங்களில் ஆயிரம் பிறப்புகளுக்கு சுமார் 15 கூடுதல் பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. இரண்டாவது, அதற்குப் பிந்தைய பிறப்புகளில் மாற்றம் அதிகமாகத் தெரிந்தது. இவற்றில் பெண் குழந்தை பிறக்கும் வாய்ப்பு 2.1 சதவீதப் புள்ளிகள் உயர்ந்துள்ளது. முதல் குழந்தை பெண்ணாக இருந்த குடும்பங்களில், இரண்டாவதும் பெண்ணாக இருப்பதற்கான வாய்ப்பு 3.7 முதல் 5.3 சதவீதப் புள்ளிகள் உயர்ந்துள்ளது.