சட்ட அமைப்புகளுக்கு எதிராக போராடினால் அரசு வேலை இல்லை: உ.பி. அரசின் புதிய விதிகள் வெளியீடு

சட்ட அமைப்புகளுக்கு எதிராக போராடினால் அரசு வேலை இல்லை: உ.பி. அரசின் புதிய விதிகள் வெளியீடு
Updated on: 
1 min read

லக்னோ: உத்தர பிரதேச பணி​யாளர் நலத் துறை சார்​பில் கடந்த புதன்​கிழமை புதிய வழிகாட்டு நெறிகள் வெளி​யிடப்​பட்​டன. அதில் கூறி​யிருப்​ப​தாவது:

கொலை, கொள்ளை, பாலியல் வன்​கொடுமை, பாலியல் துன்புறுத்​தல், ஊழல், தீவிர​வாதம், வினாத்​தாள் கசிவு உள்​ளிட்ட குற்​றங்​களில் ஈடு​படுவோர் அரசு பணிகளில் சேர தடை விதிக்கப்படும். அரசி​யலமைப்பு சட்ட அமைப்​பு​களுக்கு எதிராகப் போராடுவோரும் அரசு பணி​யில் சேர தடை விதிக்​கப்​படும்.

எனினும் வெவ்​வேறு அரசி​யல் கொள்​கைகளை பின்​பற்​று​வோர் அரசு பணி​யில் சேர எவ்​வித தடையும் கிடை​யாது. அரசு பணி​யில் சேரும் இளைஞர்​களின் பின்​னணி குறித்து மாநில உள்​துறை விசா​ரணை நடத்​தும். உண்​மைத்​தன்மை சரிபார்ப்பு குறித்த அறிக்​கையை உள்​ளூர் போலீ​ஸார் 30 நாட்​களில் சமர்ப்​பிக்க வேண்​டும். இவ்​வாறு அதில் தெரி​விக்​கப்​பட்டு உள்​ளது.

தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமாரை பதவி நீக்​கம் செய்​யக் கோரி நாடு முழு​வதும் பல்​வேறு போராட்​டங்​கள் நடைபெற்று வரு​கின்​றன. இதில் பங்​கேற்​றுள்ள இளைஞர்​களை அச்​சுறுத்​தும் வகை​யில் உத்​தர பிரதேச அரசு புதிய விதி​களை வெளியிட்​டிருப்​ப​தாக சமாஜ்வாதி, காங்​கிரஸ் உள்​ளிட்ட கட்​சிகள் குற்றம் சாட்டி உள்ளன.

சட்ட அமைப்புகளுக்கு எதிராக போராடினால் அரசு வேலை இல்லை: உ.பி. அரசின் புதிய விதிகள் வெளியீடு
இஸ்ரேல் தேர்தல் நிலவரமும், அடுத்தடுத்த அரசியல் திருப்பங்களும் - ஒரு விரைவுப் பார்வை

X