மேற்கு வங்கத்தில் செயல்பாடுகளை நிறுத்திய ஐ-பேக்

முதல்வர் மம்தாவின் தேர்தல் பிரச்சாரம் பாதிப்பு
மேற்கு வங்கத்தில் செயல்பாடுகளை நிறுத்திய ஐ-பேக்
Updated on
1 min read

புதுடெல்லி: மேற்கு வங்​கத்​தில் ஐ-பேக் நிறு​வனம், முதல்​வர் மம்தா பானர்ஜி தலை​மையி​லான திரிண​மூல் காங்​கிரஸ் கட்சிக்கு தேர்​தல் பிரச்​சார ஆலோ​சனை​களை வழங்கி வரு​கிறது.

இந்​நிலை​யில் நிலக்​கரி ஊழல் தொடர்​பான சட்​ட​விரோத பணப் பரிவர்த்​தனை வழக்​கில் கொல்​கத்​தா​வில் உள்ள ஐ-பேக் அலுவலகத்​தில் அமலாக்​கத் துறை சோதனை நடத்​தி​யது. இச்சூழலில் ஐ-பேக் தனது ஊழியர்​களுக்கு அனுப்​பி​யுள்ள ஒரு மின்​னஞ்​சலில் மேற்கு வங்​கத்​தில் அடுத்த 20 நாட்​களுக்கு பணிகளை நிறுத்தி வைக்க நிர்​வாகம் முடிவு செய்​துள்​ள​தாக குறிப்​பிடப்​பட்​டுள்​ளது. மேற்கு வங்க பேர​வைக்கு 2 கட்​ட​மாக தேர்தல் நடை​பெற உள்​ளது.

இந்​நிலை​யில் ஐ-பேக் தனது செயல்​பாடு​களை நிறுத்​து​வ​தால் திரிண​மூல் காங்​கிரஸின் தேர்​தல் பிரச்​சா​ரம் பாதிக்​கப்​படும் நிலை ஏற்​பட்​டுள்​ளது. ஐ-பேக், வாக்​குச்​சாவடி அளவில் தரவு​களை சேகரித்​து, அதன் அடிப்​படை​யில் தேர்​தல் பிரச்​சார வியூ​கங்​களை வகுத்து தரு​கிறது. இந்​தப் பணி​கள் அனைத்​தும் ஏற்​கெனவே நிறைவடைந்து விட்​ட​தாக திரிண​மூல் வட்​டாரங்​கள் தெரிவிக்கின்​றன.

இருப்​பினும், வாக்​குப்​ப​திவு நாளில் வாக்​காளர்​களை வாக்​குச்​சாவடிக்கு அழைத்​துச் சென்​று, அவர்​கள் வாக்​களிப்​பதை உறு​தி​செய்​வது கடின​மாக அமை​யும் வாய்ப்​பு​கள் உள்​ளன. திரிண​மூல் ஆதர​வாளர்​கள் எங்கு வசிக்​கின்​றனர் என்​பது குறித்த தரவு​களும் ஐ-பேக் வசம் உள்​ளது இதற்கு காரண​மாக கூறப்​படு​கிறது. கடந்த சில வருடங்​களாக முதல்​வர் மம்தா அரசின் திட்​டங்​களை செயல்​படுத்​தும் பணியை ஐ-பேக் நிறு​வனமே செய்து வந்​தது. இதற்கு அத்​திட்​டங்​களை அந்​நிறு​வனமே வடிவ​மைத்​தது காரணம் ஆகும்.

இந்​நிலை​யில் ஐ-பேக் அலு​வலர்​கள் யாரும் தங்​கள் வேலையை இழக்க மாட்​டார்​கள் என்​றும், அனை​வருக்​கும் தங்​கள் கட்சி ஊதியம் வழங்​கும் எனவும் மம்தா பானர்ஜி அறி​வித்​துள்​ளார். அதே சம​யம், "ஐ-பேக் முழு​மை​யாக மூடப்​படவோ அல்​லது அதன் அலு​வலர்​கள் எவரும் கைது செய்​யப்​படவோ இல்​லை. ஐ-பேக் மையக் குழு​வின் பணி திரிண​மூல் கட்​சிக்​காக தொடரு​கிறது. அதன் அலு​வலர்​கள் வீடு​களி​லிருந்தே பணி​யாற்​றும்​படி கேட்​டுக் கொள்​ளப்​பட்​டுள்​ளனர்​" என்​று தகவல்​கள்​ வெளி​யாகியுள்​ளன.

மேற்கு வங்கத்தில் செயல்பாடுகளை நிறுத்திய ஐ-பேக்
Ullozhukku: அன்பும் மன்னிப்பும், அஞ்சுவும் லீலாம்மாவும் | திரை தேவதைகள் 14

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in