துர்கா பூஜை பந்தலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது எப்படி? - போலீஸார் விசாரணையில் அதிர்ச்சி தகவல்

துர்கா பூஜை பந்தலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது எப்படி? - போலீஸார் விசாரணையில் அதிர்ச்சி தகவல்
Updated on: 
1 min read

கொல்கத்தா: மேற்​கு​வங்க மாநிலம் கொல்​கத்​தாவின் சோர​பாகன் பகுதி​யில் நவ​ராத்​தி​ரியையொட்டி அமைக்​கப்​பட்​டிருந்த துர்கா பூஜை பந்​தலில் நேற்று முன்​தினம் இரவு கூட்ட நெரிசல் ஏற்​பட்ட​தில் 13 பெண்​கள், 2 சிறு​வர்​கள் உட்​பட 19 பேர் உயி​ரிழந்​தனர்.

விபத்​துக்​கான காரணம் குறித்து போலீ​ஸார் கூறுகை​யில், ‘‘கனமழை பெய்​ததால் பந்​தலுக்கு வெளி​யில் காத்​திருந்த மக்​கள் மழையி​லிருந்து தப்​பிக்க ஒரே நேரத்​தில் பந்​தலுக்​குள் நுழைய முயன்​றனர்.

அதேநேரம், பந்​தலுக்​குள் இருந்​தவர்​கள் அங்​கேயே தங்​கி​யிருக்க முயன்​றுள்​ளனர். இந்​தச்​சூழலில், “பந்​தல் சரிந்து விழப்​போகிறது, உடனே வெளியேறுங்​கள்” என்று ஒலிபெருக்​கி​யில் அமைப்​பாளர்​கள் அறி​விப்பு செய்​துள்​ளனர்.

இத​னால் பீதி​யடைந்த மக்​கள் அவசர​மாக வெளியேற முயல, மறு​புறம் ஒரு பிரி​வினர் உள்ளே செல்ல முயன்றதால், தள்​ளு​முள்​ளும் நெரிசலும் ஏற்​பட்​டுள்​ளது.

‘பந்​தல் சரிந்து விழப்​போகிறது’ என்று ஒலிபெருக்​கி​யில் அறி​வித்த நபர் குறித்து விசா​ரணை நடத்தி வரு​கிறோம்” என்​றனர்.

இச்​சம்​பவம் தொடர்​பாக சோர​பாகன் துர்கா பூஜை கமிட்டி செய​லா​ளர், துணைத் தலை​வர், பந்​தல் வடிவ​மைப்​பாளர் உட்​பட 7 பேரை போலீ​ஸார் கைது செய்து 10 நாள் காவலில் எடுத்​துள்​ளனர்.

துர்கா பூஜை பந்தலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது எப்படி? - போலீஸார் விசாரணையில் அதிர்ச்சி தகவல்
தூய்மைப் பணியாளர் பெயரில் சம்பளம் ரூ.99 ஆயிரம் மோசடி: ஊழியர் சிறையில் அடைப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in