தூய்மைப் பணியாளர் பெயரில் சம்பளம் ரூ.99 ஆயிரம் மோசடி: ஊழியர் சிறையில் அடைப்பு

தூய்மைப் பணியாளர் பெயரில் சம்பளம் ரூ.99 ஆயிரம் மோசடி: ஊழியர் சிறையில் அடைப்பு
Updated on: 
1 min read

சென்னை: ஆலந்​தூர் பகு​தி​யில் தனி​யார் நிறு​வனம் ஒன்று சென்னை மாநக​ராட்​சி​யுடன் ஒப்​பந்​தம் செய்து தூய்​மைப் பணி​களை மேற்​கொண்டு வரு​கிறது. இந்த நிறு​வனத்​தில் கார்த்​திக்​கேயன் என்​பவர் மேற்​பார்​வை​யாள​ராக உள்ளார்.

மஹாலட்​சுமி என்​பவர் தூய்​மைப் பணி​யாளராக வேலை செய்​த​தாக கார்த்​திக்​கேயன் பதிவேடு தயாரித்​து அவருக்கு மாதம் ரூ.19,800 சம்​பளம் வழங்​கப்​பட்​ட​தாகக் கணக்​குக் காட்​டி, மொத்​தம் ரூ.98,930 மஹா லட்​சுமி​யின் மகன் பாண்​டியனின் வங்​கிக் கணக்​குக்கு அனுப்​பியுள்ளார்.

பாண்​டியனும் அதே நிறு​வனத்​தில் தூய்மை பணி​யாள​ராகப் பணிபுரிந்து வருகிறார்.

இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்​கில் தலைமறை​வாக உள்ள கார்த்​திக்​கேயனை போலீ​ஸார் தேடி வருகின்றனர்.

தூய்மைப் பணியாளர் பெயரில் சம்பளம் ரூ.99 ஆயிரம் மோசடி: ஊழியர் சிறையில் அடைப்பு
ஐடி பெண்களின் படங்களை ஆபாசமாக சித்தரித்தவர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in