“இந்துக்கள் பூஜை பந்தல் அமைக்க நீதிமன்ற அனுமதி பெற வேண்டியுள்ளது” - நிதின் நபின் குற்றச்சாட்டு

பாஜக தேசிய தலை​வர் நிதின் நபின்

பாஜக தேசிய தலை​வர் நிதின் நபின்

Updated on
1 min read

கொல்கத்தா: இந்​துக்​கள் பூஜை பந்​தல் அமைக்க நீதி​மன்​றத்தை நாட வேண்​டிய நிலை உள்​ளது என்று பாஜக தேசிய தலை​வர் நிதின் நபின் குற்​றம் சாட்​டி​னார்.

பாஜக​வின் புதிய தலை​வர் நிதின் நபின் நேற்று மேற்கு வங்​கத்​தின் வடக்கு 24 பர்​கா​னாஸ் மாவட்​டத்​தில் உள்ள தட்​சிணேஸ்​வர் காளி கோயி​லில் வழிபட்​டார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறும்போது, “மேற்கு வங்​கத்​தில் இந்​துக்​கள் பூஜை பந்​தல் அமைக்க உயர் நீதி​மன்​றத்தை நாடி அனுமதி பெற வேண்​டிய நிலை உள்​ளது. அதே நேரத்​தில் தொழுகை நடத்த அரசால் அனு​மதி வழங்​கப்​படு​கிறது. இது மிக​வும் துர​திருஷ்ட​வச​மானது. மேற்கு வங்​கத்தை பொன்​மய​மான மற்​றும் வளர்ச்சி அடைந்த மாநில​மாக மாற்ற நாங்​கள் காளி அன்​னை​யின் ஆசியை நாடி​யுள்​ளோம்” என்​றார்.

மம்தா பானர்ஜி பதிலடி: இதற்​கிடை​யில், திரிண​மூல் காங்​கிரஸ் தலை​வரும் முதல்​வ​மான மம்தா பானர்ஜி நேற்று தேர்​தல் பிரச்​சார கூட்​டம் ஒன்​றில் பேசுகை​யில் “வாக்​காளர் பட்​டியலில் இருந்து உண்​மை​யான வாக்​காளர்​கள் நீக்​கப்​பட்​டிருக்​கலாம் என கவலை எழுந்​துள்​ளது. இதனால் தேர்​தல் நடை​முறை​களின் நேர்மை மற்​றும் வெளிப்​படைத்​தன்மை மீது கேள்வி எழுந்​துள்​ளது. அதே​நேரம் மக்​களின் அடை​யாளம் மற்​றும் குடி​யுரிமை குறித்து கேள்வி​ எழுப்​பப்​படு​கிறது.

பாஜக, வங்​காளி​களுக்கு எதி​ரான கட்​சி. இன்று அவர்​கள் வங்​காளி​களின் வாக்குரிமையை பறிக்​கின்​றனர். நாளை தேசி​யக் குடி​யுரிமைப் பதிவேடு மூலம் நமது குடி​யுரிமை​யையே பறிப்பார்கள்​” என்​றார்​

<div class="paragraphs"><p>பாஜக தேசிய தலை​வர் நிதின் நபின்</p></div>
திரிணமூல் vs பாஜக: மேற்கு வங்க தேர்தல் களம் 2026 எப்படி? - ஒரு தெளிவுப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in