

சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து லீக் போட்டியில் இன்று சென்னையின் எப்சி, எப்சி கோவா அணிகள் மோதவுள்ன.
சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் இன்று மாலை 5 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது. நடப்பு சீசனில் கடந்த ஆட்டத்தில் சென்னையின் எப்சி அணி 1-0 என்ற கணக்கில் கேரள அணியை வீழ்த்திய உற்சாகத்தில் இந்தப் போட்டியில் களமிறங்குகிறது.
இந்த சீசனில் சென்னையின் எப்சி அணிக்கு சென்னையில் நடைபெறும் முதல் ஆட்டமாகும் இது. சென்னை, கோவா அணிகள் இதுவரை 30 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் சென்னை அணி 9 முறையும், கோவா அணி 18 முறையும் வென்றுள்ளன. 3 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.