“போர்களால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க அரசு பாடுபடுகிறது” - பிரதமர் மோடி

“போர்களால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க அரசு பாடுபடுகிறது” - பிரதமர் மோடி
Updated on
2 min read

சில்சார் (அசாம்): “உலகளாவிய மோதல்களால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க மத்திய அரசு பாடுபடுகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி மக்கள் மத்தியில் பீதியை கிளப்புகிறது” என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

அசாமின் சில்சார் நகரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் ரூ.23,550 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள திட்டங்களை தொடங்கிவைத்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ‘‘உலகம் முழுவதும் போர்களை எதிர்கொண்டு வரும் நிலையில், நாட்டு மக்கள் மீது அவற்றின் தாக்கத்தைக் குறைப்பதற்காக நாங்கள் தொடர்ந்து முயன்று வருகிறோம். காங்கிரஸ் கட்சி ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சியாக செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் அக்கட்சி அதில் இருந்து தவறிவிட்டது. மாறாக, மக்களிடையே பீதியை உருவாக்கவே அது முயல்கிறது.

அசாம் குறித்தோ அல்லது தேசம் குறித்தோ அவர்களுக்கு எந்த ஒரு தொலைநோக்குப் பார்வையும் கிடையாது. மாறாக, மோடியை அவதூறாகப் பேச வேண்டும், வதந்திகளையும் பொய்களையும் பரப்ப வேண்டும், மக்களை திசை திருப்பும் வகையில் போலியான ரீல்ஸ்களை உருவாக்க வேண்டும். இதுதான் அவர்களுக்குத் தெரியும்.

முழு உலகமும் செயற்கை நுண்ணறிவு துறை மீது மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது. டெல்லியில் இது தொடர்பாக நடைபெற்ற உச்சி மாநாடடு வெற்றிகரமாக இருந்தது. இந்த உச்சி மாநாட்டில் உலகத் தலைவர்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், அவற்றின் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். ஆனால், காங்கிரஸ் கட்சியோ ஆடையை கிழத்துக்கொண்டு ஒரு நாடகத்தை அரங்கேற்றியது.

இதன்மூலம் நாட்டையே அக்கட்சி அவமானப்படுத்த முயன்றது. ஒட்டுமொத்த நாட்டு மக்களும் இந்த ஆபாச போராட்டத்தைக் கண்டித்தார்கள். ஆனால், காங்கிரஸின் ராஜ குடும்பம் மட்டும் தங்கள் செயலை நினைத்து தங்களுக்குத் தாங்களே முதுகில் தட்டிக்கொடுத்துப் பாராட்டிக்கொள்கின்றனர். காங்கிரஸ் கட்சியிடம் தங்கள் சொந்த ஆடைகளைக் கிழித்துக்கொள்வதைத் தவிர வேறு எதுவும் மிச்சமில்லை.

காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஒவ்வொரு தேர்தல்களிலும் தோல்வி அடைந்து வருகிறது. அவர்களின் தோல்வி எண்ணிக்கை விரைவில் 100-ஐ தொடும். தொடர் தோல்விகளால் ஏற்பட்ட விரக்தி காரணமாக அக்கட்சி தேசத்துக்கு எதிராக ஒரு போர்க்களத்தையே தொடங்கியுள்ளது. அக்கட்சியின் தலைவர்கள் நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதிலேயே மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

வடகிழக்கு மாநிலங்களை காங்கிரஸ் கட்சி எவ்வாறு தனித்து விட்டுவிட்டதோ அதேபோன்று, பராக் பள்ளத்தாக்கை பலவீனப்படுத்துவதிலும் அது முக்கிய பங்காற்றியது. இந்தியா சுந்திரம் அடைந்தபோது பராக் பள்ளத்தாக்குக்கு இருந்த கடல்வழித் தொடர்பை துண்டிக்கும் வகையில் எல்லை வரையறுக்கப்படுவதை காங்கிரஸ் கட்சி அனுமதித்தது. ஒரு காலத்தில் தொழில் மையமாகத் திகழ்ந்த பராக் பள்ளத்தாக்கு தனது அடிப்படை வலிமையை இழந்துவிட்டது. இன்று, அதை மாற்றியமைக்கும் பணியில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது’’ என தெரிவித்தார்.

மத்​திய கிழக்​கில் தீவிரமடைந்​துள்ள ஈரான் - அமெரிக்​கா, இஸ்​ரேல் மோதல் காரண​மாக இந்​தி​யா​வில் சமையல் எரி​வாயு சிலிண்​டர் (எல்​பிஜி) விநி​யோகம் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டுள்​ளது. ஹார்​முஸ் ஜலசந்தி கிட்​டத்​தட்ட மூடப்​பட்​டுள்​ள​தால், கத்​தார் மற்​றும் சவுதி அரேபியா போன்ற நாடு​களில் இருந்து எல்​பிஜி வருவது தடைபட்டுள்​ளது. இதனால், கடந்த சில நாட்​களாக வணிக பயன்​பாட்​டுக்​கான சிலிண்​டர் விநி​யோகம் நிறுத்​தப்​பட்​டுள்​ளது.

இதன் காரணமாக அச்சமடைந்த ​மக்​கள், வீட்டு உபயோக சிலிண்​டருக்​கான புக்​கிங்கை அதிக அளவில் செய்​யத் தொடங்​கினர். போன் மூலம் அதிக அளவில் புக்​கிங் செய்​யப்​படு​வ​தால் அந்த சிஸ்​டம் செயலிழந்​தது. இதையடுத்து எல்​பிஜி ஏஜென்சி முன்பு அதிக அளவில் பொது​மக்​கள் குவி​யத் தொடங்​கினர். இந்நிலை​யில், எல்​பிஜி சிலிண்​டர் உற்​பத்தி 30 சதவீதம் அதிகரித்துள்​ள​தாக​வும், மக்​கள் பீதி அடைய வேண்​டாம் என்​றும் மத்​திய அரசு அறி​விப்பு வெளியிட்டுள்​ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் பின்புலத்தில், உலகளாவிய மோதல்களால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க மத்திய அரசு பாடுபடுகிறது என்று பிரதமர் மோடி கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

“போர்களால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க அரசு பாடுபடுகிறது” - பிரதமர் மோடி
1971 போர் வெற்றியில் முக்கிய பங்காற்றிய ‘பிரிகேடியர்’ வி.ஆர்.சுவாமிநாதன் மறைவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in