உத்தர பிரதேச மாநிலத்தில் ஜவுளிக்கடை பொம்மையை எரித்து ரூ.50 லட்சம் காப்பீடு தொகை பெற முயன்ற கும்பல் கைது

உத்தர பிரதேச மாநிலத்தில் ஜவுளிக்கடை பொம்மையை எரித்து ரூ.50 லட்சம் காப்பீடு தொகை பெற முயன்ற கும்பல் கைது
Updated on
1 min read

புதுடெல்லி: காப்​பீடு தொகை ரூ.50 லட் சத்தை பெறு​வதற்​காக ஜவுளிக்​கடை பொம்​மையை எரிக்க முயன்று 4 பேர் கைதாகி​யுள்​ளனர்.

உ.பி​யின் புனித நகரங்​களில் ஒன்​றாக இருப்​பது கடு​முக்​தேஷ்வர். இங்கு ஓடும் கங்கை நதி​யின் கரை​யிலுள்ள பிரிஜ்​காட் எனும் சுடு​காடு வாராணசி​யைப் போல் பிரபல​மானது. இங்கு நேற்று முன்​தினம் ஒரு கும்​பல் ஒரு பொம்​மை​யுடன் இறு​திச் சடங்கு செய்ய வந்​தது பரபரப்பை ஏற்​படுத்​தி​யது.

அவர்​கள், இறந்​தவரின் உடல் காரில் இருப்​ப​தாகக் கூறி அதற்கு இறுதி சடங்கு செய்​வதற்​கான ஏற்​பாடு​களை செய்​தனர். இறு​தி​யில் காரிலிருந்து உடலை எடுப்​ப​தற்கு உதவியப் பண்​டிதர் ​காந்த் மிஸ்​ரா​விற்கு பெரும் அதிர்ச்சி ஏற்​பட்​டது. துணி​யால் மூடப்​பட்​டிருந்த உடலின் எடை லே​சாக இருந்​தது. இதுகுறித்து ​காந்த் மிஸ்ரா கேட்​டதற்​கு, இறந்​தவர் வெகு​நாட்​களாக உடல்​நலம் குன்றி மருத்​து​வ​மனை​யில் இருந்​தார் என கூறி​யுள்​ளனர்.

சிதை​யில் உடலை வைத்​த​பின் பலவந்​த​மாகத் துணியை அகற்​றிப் பார்த்த பண்​டிதர்​களுக்கு அதிர்ச்​சி. அதில் ஜவுளிக் கடை பொம்மை இருந்​தது. இதுகுறித்து உடனடி​யாகக் காவல்​துறைக்கு தகவல் அளிக்​கப்​பட்​டது. இரு​வர் தப்பி ஓடி​விட மற்ற இரு​வரை இதர பண்​டிதர்​களு​டன் சேர்ந்து பிடித்த ​காந்த் மிஸ்​ரா, அவர்​களை போலீ​ஸாரிடம் ஒப்​படைத்​தார்.

கைது செய்​யப்​பட்ட இரு​வரிடம் காவல் துறை​யினர் நடத்​திய விசா​ரணை​யில், ரூ.50 லட்​சம் காப்​பீடு தொகை பெறு​வதற்​காக இந்த முயற்​சி​யில் ஈடு​பட்​ட​தாக தெரி​வித்​தனர். அதன்​பின்​னர் தப்​பியோடிய இரு​வரும் கைது செய்​யப்​பட்​டனர்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்​டிடம் பண்​டிதர் ​காந்த் மிஸ்ரா கூறுகை​யில், ‘துக்க உணர்​வும் இன்றி வந்​தவர்​கள் உடலை எரிப்​ப​தில் தீவிர​மாக இருந்​தனர். அவர்​கள் மீது சந்​தேகம் ஏற்​பட்​ட​தால், துணியை அகற்றி உடலை பார்த்​தோம். இல்லை என்​றால், அவர்​கள் பொம்​மையை எரித்து விட்​டு, காப்​பீடு செய்​யப்​பட்​ட​வருக்கு இறப்பு சான்​றிதழ் பெற்​றிருப்​பர்’’ என்​றார். இது போன்ற காப்​பீடு மோசடிகள் வட மாநிலங்​களில்​ அதி​கரித்​து வருகிறது.

உத்தர பிரதேச மாநிலத்தில் ஜவுளிக்கடை பொம்மையை எரித்து ரூ.50 லட்சம் காப்பீடு தொகை பெற முயன்ற கும்பல் கைது
சிம் கார்டு பயன்பாட்டில் இருக்க வேண்டும்: வாட்ஸ் அப், டெலிகிராம் செயலிகளுக்கு உத்தரவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in