சிம் கார்டு பயன்பாட்டில் இருக்க வேண்டும்: வாட்ஸ் அப், டெலிகிராம் செயலிகளுக்கு உத்தரவு

சிம் கார்டு பயன்பாட்டில் இருக்க வேண்டும்: வாட்ஸ் அப், டெலிகிராம் செயலிகளுக்கு உத்தரவு
Updated on
1 min read

புதுடெல்லி: இந்​தி​யா​வில் வாட்ஸ் அப், பேஸ்​புக், இன்​ஸ்​டாகி​ராம், டெலிகி​ராம், சிக்​னல், அரட்​டை, ஜியோ சேட், ஸ்னாப்​சேட், சேர் சாட் உள்​ளிட்ட பல சமூக வலை​தளங்​கள் பயன்​பாட்​டில் உள்​ளன. இந்த சமூக வலைதள செயலிகளை மொபைல்​போனில் பதி​விறக்​கம் செய்​யும் ​போது சிம் கார்டு அவசி​யம்.

இதன்​பிறகு சிம் கார்டை அகற்​றி​னாலோ அல்​லது சிம் கார்டு செயலிழந்​து​விட்​டாலோ கூட செயலிகள் தொடர்ந்து பயன்​பாட்​டில் இருக்​கும். சமூக வலைதள செயலிகளை பயன்​படுத்த இணைய வசதி மட்டும் போது​ம்.

இதை பயன்​படுத்தி சைபர் குற்​றங்​கள் அதி​கரித்து வரு​கின்றன. இந்த சூழலில் மொபைல்​போனில் ஆக்​டிவ் சிம் கார்டு இருந்​தால் மட்​டுமே வாட்ஸ் அப் உள்​ளிட்ட செயலிகளை பயன்​படுத்த முடி​யும். சிம் கார்டு இல்​லை​யென்​றால் சமூகவலைதள செயலிகள் தானாகவே செயலிழந்​து ​விடும் என்று மத்​திய தொலைத்​தொடர்​புத் துறை புதிய விதி​களை அறி​வித்​துள்​ளது.

கணினி மற்​றும் மடிக்​கணினி​யில் சமூக வலை​தளங்​களை ஒரு​முறை லாகின் செய்​து​விட்​டால் அந்த சமூக வலை​தளங்​களை தொடர்ந்து பயன்​படுத்த முடி​யும். புதிய விதி​களின்​படி 6 மணி நேரத்​துக்கு ஒரு​முறை சமூகவலை​தளங்​கள் தானாகவே லாக் அவுட் ஆகி​விடும். மீண்​டும் வழக்கம் போல் லாக் இன் செய்ய வேண்டும்.

இதுகுறித்து மத்​திய தொலைத்​தொடர்பு துறை வட்​டாரங்​கள் கூறும்போது, ‘‘சைபர் மோசடி கும்​பல்​கள் சிம் கார்டை பயன்​படுத்​தாமல் இணை​யத்தை மட்​டும் பயன்​படுத்தி வாட்ஸ் அப் காலில் பேசி மக்​களை ஏமாற்றி வரு​கின்​றன. இதனால் குற்றவாளிகளைப் பிடிப்பதில் போலீ​ஸாருக்கு சிக்கல்கள் ஏற்படுகின்றன.

தற்​போதைய சூழலில் வங்​கிச் சேவை சார்ந்த செயலிகளை பயன்​படுத்த சிம் கார்​டு​கள் கட்​டாய​மாக உள்​ளது. அதே நடை​முறையை சமூக வலை​தளங்​களுக்​கும் அமல்​படுத்த உள்​ளோம். மத்​திய அரசின் புதிய விதி​களை 90 நாட்​களுக்​குள் அமல்​படுத்த சம்பந்தப்பட்ட அனைத்து நிறு​வனங்​களுக்​கும் கண்​டிப்​புடன் உத்​தர​விடப்​பட்டு உள்​ளது’’ என்றனர்.

சிம் கார்டு பயன்பாட்டில் இருக்க வேண்டும்: வாட்ஸ் அப், டெலிகிராம் செயலிகளுக்கு உத்தரவு
சிறையில் இம்ரான்கான் உயிரோடு இருக்கிறார்: பிடிஐ கட்சி செனட் உறுப்பினர் குர்ராம் ஜீஷன் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in