உ.பி.​யில் 2 யானைகள், 100 டிராக்டர்​களு​டன் நடை​பெற்ற மூதாட்டியின் இறுதி ஊரவலம்

உ.பி.​யில் 2 யானைகள், 100 டிராக்டர்​களு​டன் நடை​பெற்ற மூதாட்டியின் இறுதி ஊரவலம்
Updated on: 
1 min read

புதுடெல்லி: உத்தர பிரதேத்​தின் சம்​பல் மாவட்டம் பியூரா கிராமத்​தில் ராம் பேத்தி தேவி எனும் மூதாட்டி நேற்று காலமானார். இவரது பிள்ளைகள் இறுதி ஊர்​வலத்தை வித்தியாசமாக நடத்தினர். ராம் பேத்​தி​யால் வளர்க்​கப்​பட்ட 2 யானை​கள் இறுதி ஊர்வலத்தை வழிநடத்தின. இதன் பின்​னால், ராம் பேத்​தி​யின் உடல் சுமந்து வரப்​பட்​டது. இதைத் தொடர்ந்​து, சுமார் 100 டிராக்​டர்​கள் அணிவகுக்க, சிவன், கிருஷ்ணர் என இந்துக் கடவுள்​களின் படங்​களு​டன் அலங்​கார ஊர்​தி​களும் இடம்​பெற்​றன.

இத்​துடன் சுமார் 1,500 உற்​றார், உறவினர்​களும் ஊர்​வலத்​தில் பங்கேற்​றனர். இந்த ஊர்​வலம் ராஜ்​காட் கங்​கைநதி படித்​துறை வரை சென்​றது. இதுகுறித்​து, ராம் பேத்தி தேவி​யின் மகன் மன்​வீர் சிங் கூறுகை​யில், “சு​மார் 200 வருடங்​களாக எங்​கள் குடும்பத்தினர் யானை​களை வளர்த்து வரு​கிறார்​கள். இதனால், எங்​களை ‘யானைக் குடும்​பம்’ என இப்​பகு​தி​யில் அழைப்​பது வழக்​கம்.

கடைசி​யாக இருந்த மோகன் மற்​றும் பர்மா ஆகிய இரண்டு யானை​களை​யும் எங்​கள் தாய் மிக​வும் பாச​மாக வளர்ந்து வந்தார். தாயின் மறைவுக்​குப் பிறகு, அந்த இரண்டு யானை​களும் மிகுந்த சோகத்​தில் ஆழ்ந்​தன. யானை​கள் மீது அவை வைத்திருந்த பாசத்தை உணர்ந்து அவரது இறுதி ஊர்​வலத்தை இது​போல் ஏற்​பாடு செய்​தோம்” என்றார்.

உ.பி.​யில் 2 யானைகள், 100 டிராக்டர்​களு​டன் நடை​பெற்ற மூதாட்டியின் இறுதி ஊரவலம்
ஓட்டுநர்களின் பெயர், புகைப்படம் வாடகை வாகனங்​களில் கட்டாயம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in