ஓட்டுநர்களின் பெயர், புகைப்படம் வாடகை வாகனங்​களில் கட்டாயம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஓட்டுநர்களின் பெயர், புகைப்படம் வாடகை வாகனங்​களில் கட்டாயம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
Updated on: 
1 min read

புதுடெல்லி: பெண்​களுக்​கான பாது​காப்பை உறுதி செய்​யும் வகை​யில் வாடகை வாக​னங்​களில் ஓட்டுநர்களின் பெயர், புகைப்படம் அடங்​கிய பலகை இருப்​பதை உறுதி செய்ய டெல்லி காவல் ​துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்​தர​விட்​டுள்​ளது.

டெல்லி மற்​றும் தேசிய தலைநகர் பகு​தி​யில் அடுத்​தடுத்து பெண்கள் மற்​றும் சிறுமிகளுக்கு எதி​ரான பாலியல் குற்​றங்​கள் அதி​கரிப்​பது தொடர்​பாக உச்​சநீ​தி​மன்​றம் தாமாக முன்​வந்து விசா​ரணை நடத்தி வரு​கிறது. நீதிப​தி​கள் ஜே.பி.பர்​தி​வாலா, கே.வினோத் சந்​திரன் அமர்​வில் இது தொடர்​பான வழக்கு மீண்டும் விசா​ரணைக்கு வந்​த​போது, டெல்​லி​யில் உடனடி​யாக காவல்​துறை​யின் ரோந்து பணியை அதி​கரிக்க நீதிப​தி​கள் உத்தரவிட்டனர்.

குறிப்​பாக கல்வி நிறு​வனங்​கள் மற்​றும் குற்​றச்​செயல் அதி​கம் நடை​பெறக்​கூடிய பகு​தி​களில் கண்​காணிப்பை தீவிரப்​படுத்த வேண்​டும் என தெரி​வித்​தனர். அரசு மற்​றும் தனி​யார் பேருந்துகள், கேப்​கள், டாக்​ஸிகள், ஆட்​டோக்​களில் பணி​யாற்​றும் ஓட்​டுநர்​கள் மற்​றும் உதவி​யாளர்​களை கட்​டா​யம் சரி​பார்த்து பதிவு செய்ய வேண்​டும் என்​றும், அவர்​களின் பெயர், புகைப்​படம் அடங்​கிய பலகை பயணி​களுக்கு தெரி​யும் வகை​யில் வைக்க வேண்​டும் என்​றும் உத்​தர​விட்​டனர்.

மேலும், அனு​ம​தி​யின்றி செயல்​படும் மது​பானக் கடைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்​க​வும், சட்​ட​விரோத​மாக வாகனங்களை வேறு ஓட்​டுநர்​களிடம் ஒப்​படைப்​பதை தடுக்​க​வும் உத்​தர​விட்ட நீதிப​தி​கள், உத்​தர​வு​கள் முறை​யாக அமல்படுத்தப்படா​விட்​டால் டெல்லி காவல் ஆணை​யர் மற்​றும் தலை​மைச் செய​லா​ளர் தனிப்பட்ட முறை​யில் பொறுப்​பேற்க வேண்​டிய நிலை ஏற்​படும்​ என எச்சரித்​துள்​ளனர்​.

ஓட்டுநர்களின் பெயர், புகைப்படம் வாடகை வாகனங்​களில் கட்டாயம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
‘சர்வதேச சைபர் குற்றங்களை தடுக்க வேண்டும்’ - பிரதமர் மோடி வலி​யுறுத்​தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in