ஐடி ஊழியர் கொலையில் மனைவி உட்பட 4 பேர் கைது

ஐடி ஊழியர் கொலையில் மனைவி உட்பட 4 பேர் கைது
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லி லக் ஷ்மி நகரைச் சேர்ந்த வினய் குப்தா (31) என்ற ஐ.டி. ஊழியருக்​கும், ரேகாவுக்கும் சுமார் மூன்​றரை ஆண்​டு​களுக்கு முன்பு திரு​மணம் நடை​பெற்​றது. இவர்களுக்கு இரட்டை குழந்​தைகள் உள்​ளனர்.

குழந்தைக்கு மருந்து கொடுப்ப​தில் கணவன் - மனைவி இடையே வாக்​கு​வாதம் எழுந்துள்ளது. இதில் ஆத்​திரமடைந்த ரேகா, தனது பெற்​றோர், சகோ​தரர்​களை அழைத்து வந்​துள்​ளார். அவர்​கள் வினய்யை சரமாரி​யாக தாக்​கி​யுள்​ளனர்.

பக்​கத்து வீட்​டுக்​காரரின் உதவி​யுடன் மருத்து​வ​மனைக்​குக் கொண்டு செல்​லப்​பட்ட வினய், ஏற்​கெனவே இறந்​து​விட்​ட​தாக மருத்​து​வர்​கள் தெரி​வித்​தனர். இக்​கொலை தொடர்​பாக மனைவி ரேகா, அவரது இரு சகோ​தரர்​கள் உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர்​.

ஐடி ஊழியர் கொலையில் மனைவி உட்பட 4 பேர் கைது
ஆக.31-ல் புரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷம் கணக்கெடுப்பு பணி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in