ஆக.31-ல் புரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷம் கணக்கெடுப்பு பணி

ஆக.31-ல் புரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷம் கணக்கெடுப்பு பணி
Updated on
1 min read

புரி (ஒடிசா): ஒடிசா மாநிலம் புரி நகரில் உள்ள புகழ்​பெற்ற ஜெகந்​நாதர் கோயி​லின் நகைகள் உள்​ளிட்ட பொக்​கிஷங்​களை (ரத்னா பண்​டார்) கணக்​கெடுக்​கும் பணி 48 ஆண்​டு​களுக்​குப் பிறகு கடந்த மார்ச் 25-ம் தேதி தொடங்​கியது.

நவீன தொழில்​நுட்​பம் மற்​றும் 3டி மேப்​பிங் முறை​யில் கணக்​கெடுக்​கப்​பட்டு ஆவணப்​படுத்​தப்​பட்டு வரு​கிறது.

கடைசி​யாக, புரி ஜெகந்​நாதர் கோயி​லில் கடந்த ஜூலை 19-ம் தேதி ரத யாத்​திரை நடை​பெற்​றது. அப்​போது சகோதர தெய்​வங்​களான பாலபத்​ரர், தேவி சுபத்ரா மற்​றும் ஜெகந்​நாதர் ஆகியோர் குண்​டிச்சா கோயிலுக்கு ஆண்​டு​தோறும் செல்​லும் ஆன்​மிகப் பயணத்​தில் இருந்​த​போது பொக்​கிஷ கணக்​கெடுப்பு நடத்​தப்​பட்​டது.

இந்​நிலை​யில், அடுத்த கணக்​கெடுப்பு ஆகஸ்ட் 31 மற்​றும் செப்​டம்​பர் 1 ஆகிய தேதி​களில் நடத்​தப்​படும் என்று ஜெகந்​நாதர் கோயில் நிர்​வாகத்​தின் தலைமை நிர்​வாகி அரவிந்தா பதி தெரி​வித்​துள்ளார்.

ஆக.31-ல் புரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷம் கணக்கெடுப்பு பணி
ஆயுர்வேத சிகிச்சை பெற கேரளா சென்ற பவன் கல்யாண்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in