மகாராஷ்டிராவில் பாலியல் வன்கொடுமைக்குப் பின் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட விமானப்படை அதிகாரி மனைவி

பெண்ணின் கைகளைப் பிடித்துக் கொண்டு மதச் சடங்கு செய்த இளைஞர்.

பெண்ணின் கைகளைப் பிடித்துக் கொண்டு மதச் சடங்கு செய்த இளைஞர்.

Updated on
1 min read

மும்பை: மகா​ராஷ்டிர மாநிலம் நாக்​பூரைச் சேர்ந்த 24 வயதான பெண் ரியல் எஸ்​டேட் தொழில் செய்து வரு​கிறார். அவரது கணவர் விமானப்​படை அதி​காரி​யாக பணி​யாற்றி வரு​கிறார்.

இந்​நிலை​யில் ஹஸ்​ரத் மவுலானா என்​பவர் முன்​னிலை​யில், அந்தப் பெண்​ணின் விருப்​பத்​துக்கு மாறாக வலுக்​கட்​டாய​மாக மதமாற்​றச் சடங்​கு​களைச் செய்​துள்ள சம்​பவம் நடந்​துள்​ளது. அந்தப் பெண்​ணின் கைகளை பிடித்​துக் கொண்டு முஸ்​லிம் மதச்சடங்​கு​களைச் செய்​யும் வீடியோ​வும் வெளி​யாகி​யுள்​ளது. அதில் அந்​தப் பெண் என்னை விட்​டு​விடுங்​கள் என்று கதறு​வதும் பதி​வாகி​யுள்​ளது.

இந்த சம்​பவம் நடந்​ததை தாமத​மாக அறிந்து பெண்​ணின் கணவர் கடந்த 14ம் தேதி புகார் அளித்​ததை அடுத்து இந்த சம்​பவம் தற்​போது வெளிச்​சத்​துக்கு வந்​துள்​ளது. போலீ​ஸார் பதிவு செய்​துள்ள முதல் தகவல் அறிக்​கை​யில் கூறி​யுள்​ள​தாவது: கடந்த 2025-ம் ஆண்டு பிப்​ர​வரி மாதம் நிலம் வாங்க விருப்​பம் தெரி​வித்து சம்​பந்​தப்​பட்ட பெண்​ணின் பள்ளி நண்​பர் அய்​யாஸ் தாஜ் மதா​ரே, என்​பவர் தொடர்பு கொண்டு நேரில் சந்​திக்க அழைத்​துள்​ளார்.

பிப்​ர​வரி 8-ம் தேதி ஒரு ஓட்​டலில் நடந்த சந்​திப்​பின்போது, அய்​யாஸ் அந்​தப் பெண்​ணுக்​குக் கொடுத்த குளிர்​பானத்​தில் போதை மருந்து கலந்​துள்​ளார். போதை மருந்​தால் பெண் மயங்​கியதும் அவரை பாலியல் வன்​கொடுமை செய்து அதை வீடியோ​வாக பதிவு செய்​துள்​ளார். மேலும், அந்த காட்​சிகளை சமூக வலை ​தளங்​களில் வெளி​யிட்டு விடு​வ​தாக மிரட்டி கடந்த சில மாதங்​களில் அந்​தப் பெண்​ணிடம் இருந்து சுமார் ரூ.4 லட்​சம் வரை பறித்​துள்​ளார்.

இதில் தனது நண்​பர்க​ளை​யும் அய்​யாஸ் கூட்​டாளி​களாக சேர்த்துக் கொண்​டார். அந்​தப் பெண்​ணுக்கு பில்​லி, சூனி​யம் செய்து​விடு​வோம் என்​றும் அவர்​கள் மிரட்​டி​யுள்​ளனர். இந்நிலையில் கடந்த மே மாதம் 31ம் தேதி அய்​யாஸ், அவரது கூட்டாளி அமீன் ஷேக் ஆகிய இரு​வரும் சேர்ந்து அந்​தப் பெண்ணைக் கல்​மேஷ்வர் என்ற பகு​திக்கு கடத்​திச் சென்றுள்ளனர்.

அங்கு ஹஸ்​ரத் மவுலானா என்ற மதப் பெரிய​வர் முன்​னிலை​யில், அந்​தப் பெண்​ணின் விருப்​பத்​துக்கு மாறாக வலுக்​ கட்​டாய​மாக மத மாற்​றச் சடங்​கு​களைச் செய்​துள்​ளனர். இதையடுத்து அவரை, மிரட்டி அய்​யாஸுடன் அவருக்கு திரு​மணம் செய்து வைக்கப்பட்டுள்​ளது. இவ்​வாறு அந்த முதல் தகவல் அறிக்​கை​யில் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

இதையடுத்து போலீ​ஸார் தீவிர விசா​ரணை நடத்​தி, அய்​யாஸ் தாஜ் மதா​ரே, அவரது கூட்​டாளி அமீன் ஷேக் ஆகிய இரு​வரை​யும் கைது செய்து தீவிர விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். சட்​ட​விரோத​மாக இந்த திரு​மணத்தை நடத்தி வைத்த மவுலா​னாவை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர்.

<div class="paragraphs"><p><em>பெண்ணின் கைகளைப் பிடித்துக் கொண்டு மதச் சடங்கு செய்த இளைஞர்.</em></p></div>
கைலாய யாத்திரைக்கான முதல் குழு காங்டாக் வருகை
<div class="paragraphs"><p><em>பெண்ணின் கைகளைப் பிடித்துக் கொண்டு மதச் சடங்கு செய்த இளைஞர்.</em></p></div>
நிம்மதியான மரணம்... உங்களுக்கு Living Will தெரியுமா? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in