

ஷாஜகான்பூர்: உத்தர பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரைச் சேர்ந்தவர் ஆர்யன் வர்மா (21). இவர் ராணுவத்தில் பிரிகேடியராக பணிபுரிவதாக தனது அண்டை வீட்டாரிடம் கூறி வந்துள்ளார்.
மேலும் எப்போதும் ராணுவ பிரிகேடியர் உடையில், ஏர் பிஸ்டல்களுடன் 2 பவுன்சர்களைப் பாதுகாப்புக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதில் சந்தேகமடைந்த ஷாஜகான்பூரைச் சேர்ந்த சிலர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர், ஆர்யன் வர்மா பற்றி போலீஸில் புகார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ஷாஜகான்பூரிலுள்ள ராணுவ அலுவலகத்தைச் சேர்ந்த கர்னல் ஜே.எஸ்.ஜக்லான், முன்னாள் ராணுவ வீரர்களின் உதவியுடன் ஒரு திட்டம் தீட்டினார்.
அதன்படி ஷாஹீத் அருங்காட்சியகத்தில் நடைபெறும் பள்ளி மாணவ, மாணவிகள் நிகழ்ச்சிக்கு வருமாறு ஆர்யன் வர்மாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அங்கு வழக்கம் போலவே ராணுவ பிரிகேடியர் உடையில் வந்த அவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.