உ.பி.யின் காசியாபாத் காவல் சாவடியில் வெடி விபத்து: போலீஸார் தீவிர விசாரணை

உ.பி.யின் காசியாபாத் காவல் சாவடியில் வெடி விபத்து: போலீஸார் தீவிர விசாரணை
Updated on: 
1 min read

காசியாபாத்: காசி​யாபாத்​தில் உள்ள ஒரு காவல் சாவடி​யில் வெடி விபத்து ஏற்​பட்​டதில் டெலிவரி ஊழியர் காயமடைந்​தார்.

உத்​தர பிரதேச மாநிலம், காசி​யாபாத்​தின் வசுந்​தரா காவல் சாவடி​யில் வெள்​ளிக்​கிழமை இரவு 9 மணி​யளவில் திடீரென வெடி சத்​தம் கேட்​டது.

இந்த விபத்​தால் காவல் சாவடி சேதமடைந்​தன. 2 கண்​ணாடிகள் உடைந்​ததுடன் ஒரு சுவரில் விரிசலும் ஏற்​பட்​டது. இது​குறித்து காசி​யாபாத் துணை ஆணை​யர் ரிஜுல் குமார் கூறும்​போது, “வெடி விபத்து காரண​மாக காவல் சாவடி​யின் 2 ஜன்​னல் கண்​ணாடிகள் உடைந்து, விரிசல் ஏற்​பட்​டது.

அப்​போது அங்கு போலீ​ஸார் இருந்​தனர், ஆனால் அவர்​களுக்கு எந்​தக் காயமும் ஏற்​பட​வில்லை. ஒரு பொருளை வழங்க வந்த டெலிவரி ஊழியர் மீது கண்​ணாடித் துண்டு தாக்​கியதில் தலைப் பகுதி​யில் காயம் ஏற்​பட்டு மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் செல்​லப்​பட்​டார். அவர் இப்​போது நலமாக உள்​ளார்” என்​றார்.

இந்த சம்​பவம் நடந்த சிறிது நேரத்​திலேயே, தடை செய்​யப்​பட்ட அமைப்​பான ‘தெஹ்​ரீக்-உல் முஜாகிதீன் ஹிந்​துஸ்​தான்’ அமைப்பு இந்​தத் தாக்​குதலுக்​குப் பொறுப்​பேற்​றது.

இந்த சமபவம் குறித்து விசா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது. சம்​பவ இடத்​தில் வெடிமருந்​துகள், வெடிபொருட்​கள் அல்​லது அதுபோன்ற வேறு எந்​தப் பொருட்​களின் தடயங்​களும் கண்​டெடுக்​கப்​பட​வில்லை” என்று காவல் துறை​யினர் தெரி​வித்​தனர்.

உ.பி.யின் காசியாபாத் காவல் சாவடியில் வெடி விபத்து: போலீஸார் தீவிர விசாரணை
தீபாவளி: சொந்த ஊருக்கு செல்ல பேருந்து, ரயில்களில் அலைமோதிய கூட்டம்

X