Exit Poll Results 2026: அசாம் மாநிலத்தில் ஹாட்ரிக் ‘நோக்கி’ பாஜக!

Exit Poll Results 2026: அசாம் மாநிலத்தில் ஹாட்ரிக் ‘நோக்கி’ பாஜக!
Updated on
1 min read

புதுடெல்லி: அசாம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு பின்பு வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

126 தொகுதிகளை கொண்ட அசாம் மாநில சட்டப்பேரவைக்கு கடந்த 9-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக தலைமையிலும், காங்கிரஸ் கட்சி தலைமையிலும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன. கடந்த 2016 மற்றும் 2021 பேரவை தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.

ஆக்சிஸ் மை இந்தியா வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 88 முதல் 100 இடங்களை வரை வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் 27 இடங்களிலும், பிற கட்சிகள் 7 இடங்களும் பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ் - ஜேவிசி வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பிலும் பாஜக கூட்டணி 88 முதல் 101 தொகுதிகளில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 23 முதல் 33 தொகுதிகளும், மற்ற கட்சிகள் 2 முதல் 5 தொகுதிகளிலும் வெல்லும் என கூறப்பட்டுள்ளது.

மாட்ரிஸ் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் பாஜக தலைமையிலான கூட்டணி 85 முதல் 95 தொகுதிகளில் வெல்லும் என கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் 25 டூ 32, பிற கட்சிகள் 6 டூ 12 இடங்களும் வெல்ல வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீபிள்ஸ் பல்ஸ் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பிலும் பாஜக தலைமையிலான கூட்டணி 68 முதல் 72 இடங்களும், காங்கிரஸ் கூட்டணி 22 முதல் 26 இடங்களும், மற்ற கட்சிகள் 19 முதல் 28 இடங்களும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான கருத்துக் கணிப்பு முடிவுகளில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 64 இடங்களில் வெற்றி பெறுகின்ற கட்சி, அசாம் மாநிலத்தில் ஆட்சி அமைக்கும். வரும் 4-ம் தேதி அசாம் மாநிலத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகிறது.

Exit Poll Results 2026: அசாம் மாநிலத்தில் ஹாட்ரிக் ‘நோக்கி’ பாஜக!
திமுக மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in