திமுக மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?

திமுக மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
Updated on
2 min read

சென்னை: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, திமுக கூட்டணி பெரும்பான்மைக்குத் தேவையான 118 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி பெறக்கூடும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. இரண்டாம் இடத்தில் அதிமுக கூட்டணியும், மூன்றாம் இடத்தில் தவெகவும் இடம்பெறும் என்றும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

என்டிடிவி ‘பீப்பிள்ஸ் பல்ஸ்’ (NDTV's Peoples Pulse) வெளியிட்டுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புப்படி திமுக 125 தொகுதிகள் முதல் 145 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளது. அதிமுக கூட்டணி 65 முதல் 80 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. தவெக 18-24 தொகுதிகளிலும், மற்றவர்கள் 2-6 தொகுதிகளிலும் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘அக்னி’ வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளில், திமுக கூட்டணி 169 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 64 தொகுதிகளிலும், தவெக ஒரு தொகுதியிலும் வெற்றி பெறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சாணக்யா ஸ்ட்ராட்டஜிஸ்’ (chanakya strategies) வெளியிட்டுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி திமுக 145-160 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 50-65 தொகுதிகளிலும், தவெக 13-18 தொகுதிகளிலும், மற்றவர்கள் 5-8 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘மேட்ரிஸ்’ (Matrize) வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, திமுக 122 -132 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 87-100 தொகுதிகளிலும், தவெக 10-12 தொகுதிகளிலும், மற்றவர்கள் 0-6 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ரிபப்ளிக்-பி மார்க்’ (Republic-P Mark) வெளியிட்டுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, திமுக கூட்டணி 125-145 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 65-85 தொகுதிகளிலும், தவெக 16-26 தொகுதிகளிலும், மற்றவர்கள் 1-6 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஆக்ஸிஸ் மை இண்டியா’ (Axis My India) வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 92 முதல் 110 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும், அதிமுக கூட்டணி 22 முதல் 32 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும் தவெக 98 முதல் 120 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘டைம்ஸ் நவ் - ஜேவிசி’ வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 75 முதல் 95 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும் அதிமுக கூட்டணி 128 முதல் 147 இடங்கள் வரை வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும், தவெக 8 முதல் 15 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலோடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் பேரவைத் தேர்தல்கள் நடைபெற்றன.

அசாம், கேரளா, புதுச்​சேரி யூனியன் பிரதேசம் ஆகிய 3 சட்​டப்​பேர​வை​களுக்​கான தேர்​தல் ஒரே கட்​ட​மாக ஏப்​ரல் 9-ம் தேதி நடந்து முடிந்​தது. தமிழக சட்​டப்​பேர​வைக்கு ஒரே கட்​ட​மாக கடந்த 23-ம் தேதி தேர்​தல் முடிந்​தது.

மேற்​கு​வங்​கத்​தில் 2 கட்​ட​மாக தேர்​தல் நடை​பெற்றது. முதல்​கட்ட தேர்​தல் கடந்த 23-ம் தேதி நடந்து முடிந்த நிலையில், 2-ம் கட்ட தேர்​தல் இன்று நடைபெற்றது. இன்று மாலை 6 மணி​யுடன் தேர்​தல் முடிவுக்கு வந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தற்போது வெளியாகி உள்ளன.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்​நாட்​டில் 85.1% வாக்​கு​கள் பதி​வாகின. வாக்கு எண்​ணிக்​கை மே 4-ம்​ தேதி நடை​பெற உள்​ளது.

திமுக மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
‘மதுரை சித்திரைத் திருவிழா’ ஓர் ஆன்மிக கொண்டாட்டம் மட்டுமே அல்ல... ஏன்?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in