ஐஎஸ் அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த வழக்கில் பெங்களூருவில் 8 இடத்தில் அமலாக்கத் துறை சோதனை

ஐஎஸ் அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த வழக்கில் பெங்களூருவில் 8 இடத்தில் அமலாக்கத் துறை சோதனை
Updated on
1 min read

பெங்களூரு: ஐஎஸ் தீவிர​வாத அமைப்​புக்கு ஆட்​கள் மற்​றும் நிதி சேர்த்த வழக்​கில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் பெங்களூருவில் 8 இடங்​களில் சோதனை நடத்​தினர்.

என்ஐஏ அதி​காரி​கள் கடந்த ஆண்டு பெங்​களூரு மற்​றும் மும்பையில் நடத்​திய சோதனை​யில் ஐஎஸ் தீவிர​வாத அமைப்புக்கு ஆள் சேர்த்த 15 பேர் கைது செய்​யப்​பட்​டனர். அதில் இர்​பான் நசீர், அஹமது அப்​துல் காதர், முகமது தவுகிர் மஹ்மூத், ஸுஹாப் ஹமீத் ஷகீல் மன்​னா, முகமது ஷிஹாப் ஆகியோரிடம் நடத்​திய விசா​ரணை​யில் ஆள் சேர்த்​தது உறுதி செய்​யப்​பட்​டது.

4 பிரிவு​களின் கீழ் வழக்​கு: மேலும் இக்ரா நல அறக்​கட்​டளை, கைடன்ஸ் ஃபார் மேன்​கைண்ட் அறக்​கட்​டளை ஆகிய​வற்​றின் மூலம் ஐஎஸ் அமைப்​புக்கு ஆட்​களை சேர்த்​ததும், தனி நபர்களிடம் இருந்து நிதி வசூல் செய்​ததும் கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. இதனையடுத்து என்ஐஏ அதி​காரி​கள் 4 பிரிவு​களின் கீழ் வழக்​குப் ப​திவு செய்​து, குற்​றப்​பத்​திரிக்கை தாக்​கல் செய்​துள்​ளனர்.

அந்​நியச் செலா​வணி மோசடி: இந்த வழக்கு விசா​ரணை​யில் கிடைத்த தகவல்​களின் அடிப்​படை​யில் அமலாக்​கத்​துறை அதிகாரி​கள் இதனை விசா​ரித்​தனர். அதில் அறக்​கட்​டளை​கள் மூலம் அந்​நியச் செலா​வணி மோசடி, நிதி மோசடி நடந்​திருப்​பது உறுதி செய்​யப்​பட்​டது.

இதன் அடிப்​படை​யில் வழக்​குப்​ப​திவு செய்த அமலாக்​கத்​துறை அதி​காரி​கள், பெங்​களூரு​வில் நேற்று இக்ரா நல அறக்கட்டளையின் அலு​வல​கம், குர்​ஆன் வாசகர் வட்ட அலுவலகம், கைடன்ஸ் ஃபார் மேன்​கைண்ட் அறக்​கட்​டளை, அதன் நிர்​வாகி​களுக்கு சொந்​த​மான வீடு​கள் உள்​ளிட்ட 8 இடங்களில் சோதனை மேற்​கொண்​டனர்.

இதில் அறக்​கட்​டளை​கள் மூலம் முஸ்​லிம் இளைஞர்​களுக்கு ஐஎஸ் அமைப்​பின் கருத்​துகளை பரப்​பியது தொடர்​பான ஆவணங்​கள் கைப்​பற்​றப்​பட்​டுள்​ளன. குர்​ஆன் வாசகர் வட்​டத்​தின் வாயி​லாக வாராந்​திர கூட்​டங்​களை நடத்தி தீவிர​வாத கருத்​துகளை பரப்பியது தெரிய​வந்​துள்​ளது. இக்ரா அறக்​கட்​டளை ‘ஆளுமை மேம்​பாடு’ என்ற பெயரில் பயிலரங்​கம் நடத்தி இளைஞர்​களை அடை​யாளம் கண்டு பயிற்சி அளித்​தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த அறக்​கட்​டளை​கள் செல்​வந்​தர்​களிடம் நிதி திரட்​டி, இளைஞர்​களை துருக்கி வ‌ழி​யாக சிரி​யா​வுக்கு செல்ல உதவியது தொடர்​பான ஆவணங்​கள் சிக்​கி​யுள்​ள​தாக அமலாக்​கத்​துறை வட்டாரங்​கள்​ தெரி​வித்​துள்​ளன.

ஐஎஸ் அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த வழக்கில் பெங்களூருவில் 8 இடத்தில் அமலாக்கத் துறை சோதனை
ம.பி.யில் குப்பையில் வீசப்பட்ட 2 கிலோ வெள்ளிக் குவளை மீட்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in