குடியரசு தலைவர் மாளிகையில் மூதறிஞர் ராஜாஜி விழா: மார்பளவு சிலையை திரவுபதி முர்மு திறந்து வைத்தார்

குடியரசு தலைவர் மாளிகையில் மூதறிஞர் ராஜாஜி விழா: மார்பளவு சிலையை திரவுபதி முர்மு திறந்து வைத்தார்
Updated on
1 min read

புதுடெல்லி: குடியரசுத் தலை​வர் மாளி​கை​யில் மூதறிஞர் ராஜாஜியின் மார்​பளவு சிலையை குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு நேற்று திறந்து வைத்​தார்.

சுதந்​திர இந்​தி​யா​வின் முதல் மற்​றும் ஒரே கவர்​னர் ஜெனரலான ஸ்ரீ சக்​ர​வர்த்தி ராஜகோ​பாலாச்​சா​ரி​யாரை கவுரவிக்​கும் வகையில் குடியரசுத் தலை​வர் மாளி​கை​யில் ராஜாஜி விழா நேற்று தொடங்​கியது. குடியரசுத் தலை​வர் மாளி​கை​யில் மகாத்மா காந்தி சிலைக்கு எதிரே அசோக மண்​டபம் அமைந்துள்ளது. இதற்கு அரு​கில் உள்ள பிரம்​மாண்ட திறந்த படிக்கட்​டில், எட்​வின் லுட்​யன்​ஸின் மார்​பளவு சிலை அமைக்கப்பட்டு இருந்​தது.

ஆங்​கிலேயர் ஆட்​சி​யின் பொறி​யாள​ரான இவர் டெல்​லியை வடிவமைத்​தவர் ஆவார். எட்​வினின் இந்த சிலைக்கு பதிலாக ராஜாஜி​யின் மார்​பளவு சிலை அமைக்​கப்​பட்​டுள்​ளது. தமிழ்நாட்டின் முன்​னாள் முதல்​வரான ராஜாஜி​யின் சிலையை குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு திறந்து வைத்​தார்.

இந்த நிகழ்ச்​சி​யில் குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தா கிருஷ்ணன் மற்​றும் ராஜாஜி​யின் குடும்ப உறுப்​பினர்​களும் கலந்து கொண்​டனர். இதையடுத்து குடியரசுத் தலை​வர் மாளிகை கலாச்​சார மையத்​தில் நடை​பெற்ற ராஜாஜி விழா​வில் திர​வுபதி முர்மு கலந்து கொண்​டார்.

அங்கு ராஜாஜி​யின் வாழ்க்கை மற்​றும் பணி​கள் குறித்த புகைப்படம் மற்​றும் புத்தக கண்​காட்​சியை அவர் சுற்​றிப் பார்த்தார். இக்​கண்​காட்​சியை இன்று (பிப்​ர​வரி 24) முதல் மார்ச் 1 வரை பொது​மக்​களும் வந்து பார்​வை​யிடலாம். இக்கண்காட்சியில் பாரத ரத்னா ராஜாஜி​யின் வாழ்க்கை குறித்த திரைப்​பட​மும் திரை​யிடப்​பட்​டது.

இந்த நிகழ்ச்​சி​யில் குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு பேசுகையில், “வரும் 2047-ம் ஆண்​டுக்​குள் 'வளர்ச்சி அடைந்த பாரதம்' என்ற இலக்கை நோக்கி நாம் முன்​னேறிச் செல்லும்போது, ராஜாஜி போன்ற தலை​வர்​கள் கருத்​துகள் மற்​றும் லட்​சி​யங்​களால் நம்மை ஊக்​குவிக்​கின்​றனர். ராஜாஜி​யின் கனவுகளை நிறைவேற்ற நாம் அனை​வரும் உறு​தி​யேற்க வேண்டும். ராஜாஜி​யின் ஆளுமை மற்​றும் பணி​யால் ஈர்க்கப்பட்டு, இந்​திய மக்​கள் ‘முதலில் தேசம்’ என்ற உணர்​வோடு தொடர்ந்து முன்​னேறு​வார்​கள்" என்​றார்.

குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தா கிருஷ்ணன் பேசுகை​யில், “ராஜாஜி விழாவை நாம் கொண்​டாடு​வதன் மூலம், காலனித்​துவ மரபில் இருந்து விடு​படு​வதற்​கான பயணத்​தில் மற்​றொரு மைல் கல்லை நாம் எட்​டி​யுள்​ளோம். இந்​தியா காலனித்​துவ செல்வாக்கில் இருந்து வில​கிச் செல்​கிறது. நிர்​வாகம், சட்​டம், கல்வி, கலாச்​சா​ரம் என அனைத்து துறை​களி​லும் தொடர்ந்து மாற்​றம் ஏற்​பட்​டுள்​ளது” என்​றார்.

விழாவில்​ மத்திய அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான், அர்​ஜுன் ராம் மேக்​வால், கஜேந்​திர சிங் ஷெகாவத், எல்​. முரு​கன், மாநிலங்களவை துணைத் தலை​வர் ஹரிவன்​ஷ் உள்​ளிட்​டோரும்​ பங்​கேற்​றனர்​.

குடியரசு தலைவர் மாளிகையில் மூதறிஞர் ராஜாஜி விழா: மார்பளவு சிலையை திரவுபதி முர்மு திறந்து வைத்தார்
ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததில் 4 பேர் உயிரிழப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in