ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததில் 4 பேர் உயிரிழப்பு

தலா ரூ.10 லட்சம் நிதி உதவி அறிவிப்பு
ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததில் 4 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

ராஜமுந்திரி: ஆந்திர மாநிலம் ராஜ​முந்​திரி லாலாசெருவு பகுதியில் நேற்று காலை பால்​காரரிடம் பால் வாங்​கிய பலருக்கு வாந்​தி, வயிற்​றுப்​போக்​கு, மயக்​கம் ஏற்​பட்டு அரசு மற்​றும் தனியார் மருத்​து​வ​மனை​களில் சிகிச்​சைக்​காக சேர்க்கப்பட்டனர்.

இதில் சிகிச்சை பலனின்றி 4 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். 12 பேர் தற்​போது தனி​யார் மருத்​து​வ​மனை​களில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். இதில் 8 பேரின் நிலைமை கவலைக்​கிட​மாக உள்ளது. இது தொடர்​பாக போலீ​ஸார் வழக்கு பதிவு செய்து பால்காரரை கைது செய்​துள்​ளனர்.

ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு பேசுகை​யில், ‘‘உணவு பொருட்​களில் கலப்​படம் செய்​தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இறந்​தவர்​களின் குடும்​பத்​துக்கு என்​னுடைய ஆழ்ந்த இரங்​கலை தெரி​வித்​துக் கொள்​கிறேன். இது தொடர்​பாக விசா​ரணை நடத்​தப்​படும். இறந்​தவர்​களின் குடும்​பத்​துக்கு தலா ரூ.10 லட்​சம் நிதி உதவி அளிக்க உத்​தர​விட்​டுள்​ளேன்" என்​றார்.

இது தொடர்​பாக மாநில மருத்​து​வத்​ துறை ஆணை​யர் வீரபாண்டியன் பேசுகை​யில், ‘‘லாலாசெருவு பகு​தி​யில் வீடு வீடாக ஆய்வு நடத்​தப்​பட்​டது. 126 பேருக்கு பால்​காரர் பால் விநி​யோகம் செய்​துள்​ளார். அந்த பால் சாம்​பிள் கொண்டு ஆய்வு செய்​த​தில் அதில் கலப்​படம் இருந்​தது ஊர்​ஜிதம் ஆகியது. இதனை தொடர்ந்து பால்​காரர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார்​" என்றார்​.

ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததில் 4 பேர் உயிரிழப்பு
முஸ்லிம் பெண்ணுக்கு போர்வை தர மறுத்த முன்னாள் பாஜக எம்.பி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in