

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருடப்பட்டது குறித்து விசாரணை நடத்த கோரி உச்ச நீதிமன்றத்தில் 4 தனித்தனி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்களைத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு நாளை விசாரிக்கிறது. மனுதாரர்களில் ஒருவரான நரேந்திர குமார் கோஸ்வாமி, இந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும், மத்திய தணிக்கை அதிகாரி (சிஏஜி) மூலம் கோயில் நிதியை தணிக்கை செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார்.