மேற்கு வங்கத்தில் 77 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்துவது பற்றி ஆலோசனை?

கொல்கத்தாவில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’ ஒன்றை நேற்று சிசிடிவி மூலம் கண்காணித்த கட்சிகளின் தொண்டர்கள். படம்: பிடிஐ

கொல்கத்தாவில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’ ஒன்றை நேற்று சிசிடிவி மூலம் கண்காணித்த கட்சிகளின் தொண்டர்கள். படம்: பிடிஐ

Updated on
1 min read

கொல்கத்தா: தேர்​தல் ஆணைய அதி​காரி ஒரு​வர் வியாழக்​கிழமை கூறிய​தாவது: மேற்கு வங்கத்தில் கடந்த புதன்​கிழமை நடை​பெற்ற இரண்​டாம் கட்​டத் தேர்​தலின்போது பல்​வேறு முறை​கேடு​கள் நடந்​த​தாகப் புகார்​கள் எழுந்​துள்​ளன. குறிப்​பாக, தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பால்டா தொகு​தி​யில் 32, டைமண்ட் ஹார்​பரில் 29, மகரஹட்​டில் 13 மற்​றும் பஜ் பஜ் தொகு​தி​யில் 3 என மொத்​தம் 77 வாக்​குச் சாவடிகளில் மறு​வாக்​குப்​ப​திவு நடத்​தக் கோரிக்​கைகள் வந்​துள்​ளன.

மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​களில் முறை​கேடு, இயந்​திரங்​கள் மீது திர​வங்​களை ஊற்​று​தல், கண்​காணிப்பு கேம​ராக்​களை மறைத்​தல் போன்ற புகார்​கள் எழுந்​துள்​ளன. குறிப்​பாக, டைமண்ட் ஹார்​பர் பகு​தி​யில் உள்ள மகரஹட் பாஸ்​சிம் தொகு​தி​யில், வாக்​காளர்​களின் சட்​டைப் பைகளில் ரகசிய கேம​ராக்​களைப் பொருத்தி அவர்​கள் யாருக்கு வாக்​களிக்​கிறார்​கள் என்​ப​தைக் கண்​காணிக்க முயன்​ற​தாகப் பதி​வாகி​யுள்ள புகார் பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் உத்​தர​வின் பேரில், சிறப்​புப் பார்​வை​யாளர் சுப்​ரதா குப்தா சம்​பந்​தப்​பட்ட வாக்​குச் சாவடிகளில் நேரடி ஆய்வை மேற்​கொண்டு வரு​கிறார். வழக்​க​மாக மறு​நாளே நடத்​தப்​படும் ஆய்​வு​களைத் தாண்​டி, இம்​முறை கள நில​வரத்​தைத் துல்​லிய​மாக அறிந்து அறிக்கை சமர்ப்​பிக்க உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

இந்த ஆய்​வறிக்​கை​யின் அடிப்​படை​யில், மறு​வாக்​குப் ​ப​திவு குறித்த இறுதி முடிவை தேர்​தல் ஆணை​யம் எடுக்​கும். தேவைப்​பட்​டால், இன்று வெள்​ளிக்​கிழமையே (மே 1) மறு​வாக்​குப்​ப​திவு நடத்​தப்பட வாய்ப்​புள்​ளது என்​று அதி​காரி​கள்​ தெரி​வித்​தனர்​.

<div class="paragraphs"><p>கொல்கத்தாவில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’ ஒன்றை நேற்று சிசிடிவி மூலம் கண்காணித்த கட்சிகளின் தொண்டர்கள். படம்: பிடிஐ</p></div>
வெற்றி பெற்றதும் பனையூருக்கு வந்துவிடுங்கள்: தவெக வேட்பாளர்களுக்கு விஜய் திடீர் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in