குஜராத்தில் டிஜிட்டல் புரட்சி - ரூ.6 லட்சம் கோடிக்கு இலக்கு

குஜராத்தில் டிஜிட்டல் புரட்சி - ரூ.6 லட்சம் கோடிக்கு இலக்கு
Updated on
1 min read

காந்தி நகர்: குஜராத் மாநில அரசு, நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், இந்தியாவின் முதல் பிரத்யேக ‘விக்சித் குஜராத் தரவு மையக் கொள்கை 2026- 29’ என்ற திட்டத்தை நேற்று அறிமுகப்படுத்தியது.

இது குறித்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அர்ஜுன் மோத்வாடியா கூறியதாவது: பிரத்யேக தரவு மையக் கொள்கை திட்டத்தின் மூலம் முதல் கட்டத்திலேயே ரூ.6 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக உலகளாவிய தொழில் நுட்ப நிறுவனங்களுடன் கூட்டு வைத்துள்ள 14 முன்னணி நிறுவனங்களிடமிருந்து ஏற்கெனவே முதலீட்டு முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளன.

இத்திட்டம் குஜராத் மாநிலத்தை மிக முக்கியமான தரவு மையத் தளமாக மாற்றுவதோடு, சர்வதேச முதலீட்டாளர்களின் முதன்மைத் தேர்வாகவும் மாற்றும். டிஜிட்டல் பொருளாதாரத்தில் தரவுகள் “புதிய செல்வம்” என்று வர்ணிக்கப்படுகிறது. தற்போது அமெரிக்காவில் சுமார் 5,500 தரவு மையங்களும், பிரிட்டனில் 500-க்கும் மேற்பட்ட தரவு மையங்களும் உள்ளன.

ஆனால், இந்தியாவிடம் தற்போது வெறும் 200 தரவு மையங்கள் (2 கிகாவாட் திறன்) மட்டுமே உள்ளன. அடுத்த தசாப்தத்தில் இந்தியாவின் முன்னணி ஏஐ மற்றும் தரவு மைய மையமாக குஜராத் உருவெடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

குஜராத்தில் டிஜிட்டல் புரட்சி - ரூ.6 லட்சம் கோடிக்கு இலக்கு
போதைக்கு அடிமை​யான 10,656 பேரை மீட்ட பஞ்​சாப் அரசு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in