“கட்சிக்குள்ளேயே ஆட்சி மாற்றத்தை தடுக்க முடியாதவர்” - உத்தவ் தாக்கரே மீது தேவேந்திர பட்னாவிஸ் விமர்சனம்

“கட்சிக்குள்ளேயே ஆட்சி மாற்றத்தை தடுக்க முடியாதவர்” -  உத்தவ் தாக்கரே மீது தேவேந்திர பட்னாவிஸ் விமர்சனம்
Updated on: 
1 min read

நாக்பூர்: சொந்த கட்​சிக்​குள்​ளேயே (சிவசேனா) ஆட்சி மாற்​றத்தை உத்​தவ் தாக்​கரேவால் தடுக்க முடிய​வில்லை. அவர் ஆட்சி மாற்​றம் குறித்து பேசுவது வேடிக்​கை​யாக இருக்​கிறது என்று மகாராஷ்டிர முதல்​வர் தேவேந்​திர பட்​னாவிஸ் விமர்​சித்​துள்​ளார்.

சிவசேனா (உத்​தவ் தாக்​கரே அணி) தலை​வர் உத்​தவ் தாக்​கரே சமீபத்தில் கூறும்​போது, “ஓர் அரசு மக்​களின் உரிமை​களைப் பறித்​தால் அந்த அரசை மாற்ற வேண்​டியது கட்​டாயம்” என்​றார்.

இது​குறித்து மகாராஷ்டிர முதல்​வு்ர் தேவேந்​திர பட்​னாவிஸ் நாக்​பூரில் நேற்று கூறிய​தாவது: சொந்த கட்​சிக்​குள்​ளேயே ஆட்சி மாற்​றத்தை உத்​தவ் தாக்​கரேவால் தடுக்க முடிய​வில்லை. மத்​தி​யில் ஆட்சி மாற்​றம் குறித்து அவர் பேசுவது வேடிக்​கை​யாக உள்​ளது.

பால் தாக்​கரேவின் இந்​துத்​துவா கொள்​கையை உத்​தவ் கைவிட்டு விட்​டார். இதன் காரண​மாகவே சிவசேனாவில் குழப்​பம் ஏற்​பட்​டுள்​ளது. தேர்​தல் மூலம் மட்​டுமே ஆட்சி மாற்​றத்தை ஏற்​படுத்த முடியும். போராட்​டங்​களின் மூலம் ஆட்சி மாற்​றத்தை ஏற்​படுத்த முடி​யாது.

வரும் 2029-ம் ஆண்டு மக்​களவைத் தேர்​தலில் பாஜக அமோக வெற்றிபெறும். நரேந்​திர மோடி மீண்​டும் பிரதம​ராக பத​வி​யேற்​பார். நேபாளம், வங்​கதேசம், இலங்கை, பாகிஸ்தானைப் போன்று இந்​தி​யாவிலும் ஆட்சி மாற்​றத்தை ஏற்​படுத்​தலாம் என்று சிலர் கனவு காண்​கின்​றனர்.

அவர்​களின் கனவு ஒருபோதும் பலிக்​காது. இவ்​வாறு பட்​னாவிஸ் தெரி​வித்​தார். கடந்த 2022-ல் சிவசேனா கட்சி உடைந்​தது. அப்​போது ஏக்​நாத் ஷிண்டே தலை​மையில் தனி அணி உதய​மானது. அதை தேர்​தல் ஆணை​யம் அங்​கீகரித்​ததையே முதல்​வர் தேவேந்​திர பட்​னாவிஸ் மறைமுக​மாக சுட்​டிக்காட்டி விமர்​சித்​துள்​ளார்.

“கட்சிக்குள்ளேயே ஆட்சி மாற்றத்தை தடுக்க முடியாதவர்” -  உத்தவ் தாக்கரே மீது தேவேந்திர பட்னாவிஸ் விமர்சனம்
ம.பி.யின் குவாலியர் கோயில் விழாவில் லாரி மோதியதில் 14 பக்தர்கள் உயிரிழப்பு; 40 பேர் காயம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in