பிஹாரில் ரூ.34,470 கோடியில் வளர்ச்சி திட்டங்கள் தொடக்கம்

கங்கை நதியில் நிதிஷ் பாலத்தை திறந்தார் பிரதமர் நரேந்திர மோடி
பிஹாரில் ரூ.34,470 கோடியில் வளர்ச்சி திட்டங்கள் தொடக்கம்
Updated on: 
1 min read

பாட்னா: பிஹாரில் ரூ.34,470 கோடி மதிப்​பிலான வளர்ச்சி திட்​டங்​களை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தொடங்கி​வைத்​தார். இதன் ஒரு பகுதி​யாக கங்கை நதி​யில் ரூ.4,280 கோடி​யில் கட்​டப்​பட்ட நிதிஷ் பாலத்​தையும் அவர் திறந்​து​வைத்​தார்.

பிரதமர் நரேந்​திர மோடி நேற்று பிற்​பகல் பிஹார் தலைநகர் பாட்​னா​வுக்கு சென்​றார். அங்கு நடை​பெற்ற விழா​வில் ரூ.34,470 கோடி மதிப்​பிலான வளர்ச்​சித் திட்​டங்​களை அவர் தொடங்கி​வைத்​தார். இதன் ஒரு பகுதி​யாக பாட்னா மாவட்​டத்​தின் கச்சி தர்​காவையும் வைஷாலி மாவட்​டத்​தின் பிடிபூரை​யும் இணைக்​கும் வகை​யில் கங்கை நதி​யில் ரூ.4,280 கோடி செல​வில் 19.7 கி.மீ. நீளத்​துக்கு கட்​டப்​பட்ட தொங்கு பாலத்தை அவர் திறந்​து​வைத்​தார். பிரதமரின் நகர்ப்​புற வீட்​டுவசதித் திட்​டத்​தின் கீழ் கட்​டப்​பட்ட 26,900 வீடுகளை பயனாளி​களுக்கு அவர் வழங்​கினார். விழா​வில் பிரதமர் நரேந்​திர மோடி பேசிய​தாவது:

முன்​னாள் முதல்​வர் நிதிஷ் குமார் பிஹாரில் நல்​லாட்​சிக்கு வித்​திட்​டார். அவரது முயற்​சி​யால் கங்கை நதி​யில் புதிய ஆற்​றுப் பாலம் மக்​கள் பயன்​பாட்​டுக்கு திறக்​கப்​பட்டு உள்​ளது. இத​னால் சுற்​று​வட்​டார மக்​கள், விவசாயிகள் பெரிதும் பயன் அடைவார்​கள். நிதிஷ் குமாரின் மக்​கள் நலச் சேவையை அங்​கீகரிக்​கும் வகை​யில் புதிய பாலத்​துக்கு அவரது பெயர் சூட்​டப்​பட்டு உள்​ளது.

ஒரு காலத்​தில் பிஹார் என்​றாலே ஊழல்​கள் மட்​டுமே நினைவுக்கு வரும். இப்​போது பிஹார் என்​றால் வளர்ச்சி திட்​டங்​கள் நினைவுக்கு வரு​கின்​றன. இந்த மாநிலத்​தில் முதலீடுகள் குவிந்து வரு​கின்​றன.

மத்​தி​யிலும், பிஹாரிலும் ஆட்சி நடத்​தும் தேசிய ஜனநாயக கூட்​டணி அரசு மக்​களின் நலன்​களுக்கு முன்​னுரிமை அளித்து வரு​கிறது. வளமான, வலு​வான, சுயசார்​புடைய பிஹாரை உரு​வாக்க தேசிய ஜனநாயக கூட்​டணி கட்​சிகளின் தலை​வர்​கள் ஒன்​றிணைந்து செயல்​பட வேண்​டும், ஓய்​வின்றி உழைக்க வேண்​டும். இவ்​வாறு பிரதமர் நரேந்​திர மோடி பேசினார்.

பட்டமளிப்பு விழா

மத்​திய அரசின் திறன் மேம்​பாடு, தொழில்​முனைவோர் அமைச்​சகத்​தின் சார்​பில் ஆண்​டுதோறும் தேசிய திறன் பட்​டமளிப்பு விழா நடை​பெறுகிறது. இந்த ஆண்டு விழா உத்​தர பிரதேச தலைநகர் லக்​னோவில் நேற்று மாலை நடை​பெற்​றது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​றார். அப்​போது நாடு முழு​வதும் செயல்​படும் தொழிற்​பயிற்சி நிறு​வனங்​கள், தேசிய திறன் பயிற்சி நிறு​வனங்​கள், பயிற்​றுநர்​களுக்​கான பயிற்சி நிறு​வனங்​கள் ஆகிய​வற்​றில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த 52 பேருக்கு பிரதமர் மோடி விருதுகளை வழங்​கினார்.

பிஹாரில் ரூ.34,470 கோடியில் வளர்ச்சி திட்டங்கள் தொடக்கம்
காவிரியில் தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 2,000 கனஅடி நீர் திறக்க பரிந்துரை

X