

அனகாபல்லி: ஆந்திர மாநிலம், அனகாபல்லி மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12.05 மணிக்கு திடீரென லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர்.
இந்த மாவட்டத்தில் ராம்பில்லி, எடமஞ்சிலி, கோட்ட ஊரட்லா ஆகிய பகுதிகளில் நில நடுக்கத்தை மக்கள் உணர்ந்தனர். ரிக்டர் அளவு 3.7 ஆக பதிவாகி உள்ளது. நில நடுக்கத்தை உணர்ந்ததும் பயந்து போய் மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
நிலநடுக்கம் மீண்டும் ஏற்படும் என்ற பயத்தில் இரவு முழுவதும் மக்கள் தூங்காமல் பயத்தில் சாலைகளிலேயே கழித்தனர். பின்னர் அதிகாலை வேளையில் பயம் தெளிந்து அவரவர் வீடுகளுக்கு சென்றனர்.