ஜந்தர் மந்தரை விட்டு வெளியேற வேண்டும்: டெல்லி போலீஸார் அறிவிப்பு

ஜந்தர் மந்தரை விட்டு வெளியேற வேண்டும்: டெல்லி போலீஸார் அறிவிப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: ஜந்தர் மந்தர் மைதானத்தை விட்டு மாணவர்கள் உடனடி யாக வெளியேற வேண்டும் என்று டெல்லி போலீஸார் ஒலிபெருக்கியில் அறிவித்தனர்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக மாணவர்கள், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் (சிஜேபி) ஆகியோர் டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் போராட்டம் நடத்தி வந்தனர். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பது உட்பட 3 கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். இந்நிலையில் மைதானத்துக்கு வந்த போலீஸார் மாணவர்கள் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்தனர்.

ஜந்தர் மந்தர் மைதானம் முழுவதும் வாகனத்தில் சென்ற போலீஸார், ஒலிபெருக்கியில் தொடர்ந்து இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.

இதை ஏற்று போராட்ட களத்திலிருந்து மாணவர்கள் வெளியேற வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. மைதானம் முழுவதும் போலீஸார், துணை ராணுவப் படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஜந்தர் மந்தரை விட்டு வெளியேற வேண்டும்: டெல்லி போலீஸார் அறிவிப்பு
மாணவர் இயக்கத்தின் வலிமையை பிரதிபலிக்கிறது: பிரியங்கா காந்தி கருத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in