

புதுடெல்லி: டெல்லியின் துவாரகா பகுதியில் கடந்த 3-ம் தேதி அதிவேகமாக சென்ற கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் பய ணித்த சாஹில் தனேஷ்ரா (23) உயிரிழந்தார்.
இதுகுறித்து சாஹில் தாய் இன்னா மக்கான் நேற்று கூறும்போது, “என் மகன் விபத்தில் சிக்கியதாக தகவல் கிடைத்ததும் பதறியடித்துக் கொண்டு ஓடினேன். அப்போது என் மகன் சாலையில் கிடந்தான்.
அவன் படுகாயமடைந்து சுமார் 10 நிமிடங்கள் வலியால் துடித்திருக்கிறான். உதவி கேட்டு கூச்சலிட்டிருக்கிறான். அங்கே ஆம்புலன்ஸ் இருந்தும் அவனை மருத்துவனைக்கு உடனே அழைத்துச் செல்லவில்லை” என்றார்.
இந்த விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டியது ஒரு சிறுவன் என்றும் அவனிடம் உரிமம் இல்லை என்றும் தெரியவந்துள் ளது. அந்தக் கார் ஏற்கெனவே 13 முறை விதிமுறைகளை மீறியது தொடர்பான அபராத சீட்டுகள் (சலான்) நிலுவையில் உள்ளது.