டெல்லியில் ஓடும் பேருந்தில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - இருவர் கைது

பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த பேருந்து

பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த பேருந்து

Updated on
1 min read

டெல்லி: தலைநகர் டெல்லியில் ஓடும் பேருந்தில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் உள்ள பணிமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பேருந்து ஒன்று, பின்னர் அங்கிருந்து வடக்கு டெல்லியின் திமார்பூரில் உள்ள வாகன நிறுத்துமிடம் நோக்கி புறப்பட்டுள்ளது. அப்போது, பாரி சவுக் பகுதியில் சிறுமி ஒருவர் தனியாக நின்று கொண்டிருப்பதைப் பார்த்த பேருந்து ஓட்டுநர், பேருந்தை நிறுத்தி அவரை ஏற்றிக்கொண்டுள்ளார். இதையடுத்து, அந்த சிறுமி ஓட்டுநர் மற்றும் நடத்துனரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

பின்னர், அந்த சிறுமியை காஷ்மீரி கேட் பகுதியில் இறக்கி விட்டுவிட்டு பேருந்து திமார்பூருக்கு சென்றுள்ளது. அங்கு பேருந்தின் ஓட்டுநரும் நடத்துனரும் கைது செய்யப்பட்டனர்.

பேருந்தின் ஜன்னல்கள் தடிமானான திரைகளால் மூடப்பட்டிருந்ததாகவும், இதனால் வெளியில் இருந்து உள்ளே இருப்பதைப் பார்க்க முடியாத நிலை இருந்ததாகவும் கூறப்படுகிறது. விதிமுறைகளின்படி, வணிக ரீதியிலான பயணிகள் வாகனங்களுக்குள் பார்வையை மறைக்கும் வகையில் திரைகள் அமைப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த பேருந்து, நொய்டா - கிரேட்டர் நொய்டா விரைவுச்சாலை மற்றும் ரிங் ரோடு வழியாக பல்வேறு முக்கிய பகுதிகள் வழியாக பயணித்துள்ளது. எனினும், ஒரு இடத்தில் கூட அது சோதனைக்காக நிறுத்தப்படவில்லை என கூறப்படுகிறது.

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் நடந்த நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் நாடு தழுவிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. இது, பெண்களின் பாதுகாப்புக்கு ஏற்றதாக தலைநகர் டெல்லி உள்ளதா என்ற கேள்வியை வலுவாக எழுப்பியுள்ளது.

<div class="paragraphs"><p>பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த பேருந்து</p></div>
சிஜேபி-யின் செப்.5 பேரணிக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in