மேகாலயா நிலக்கரி சுரங்க உயிரிழப்பு 27 ஆக உயர்ந்தது

மேகாலயா நிலக்கரி சுரங்க உயிரிழப்பு 27 ஆக உயர்ந்தது
Updated on
1 min read

ஷில்லாங்: மேகாலயாவின் கிழக்கு ஜைந்தியா ஹில்ஸ் மாவட்டம், தங்ஸ்கு பகுதியில் சட்டவிரோத ‘எலி வளை’ நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வந்தது. இதில் கடந்த வியாழக்கிழமை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி தொடங்கியது. இந்நிலையில் சுரங்கத்தில் இருந்து நேற்று மேலும் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து, இறந்தவர்கள் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் பலரை காணவில்லை என்பதால் அங்கு தேடுதல் மற்றும் மீட்புப் பணி தொடர்கிறது.

இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெறுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விகாஷ் குமார் தெரிவித்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார் 2 பேரை கைது செய்துள்ளனர்.

மேகாலயா நிலக்கரி சுரங்க உயிரிழப்பு 27 ஆக உயர்ந்தது
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு உமர் அப்துல்லா பதிலடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in