காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு உமர் அப்துல்லா பதிலடி

ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா

ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா

Updated on
1 min read

ஸ்ரீநகர்: காஷ்மீர் ஒற்றுமை தினத்தையொட்டி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சட்டப்பேரவையில் பேசினார்.

அப்போது, “பாகிஸ்தான் மக்கள் சார்பில் காஷ்மீரில் உள்ள எங்கள் சகோதரர்களுடன் ஒற்றுமையாக நிற்க நான் இங்கு வந்துள்ளேன். முகமது அலி ஜின்னா காஷ்மீரை பாகிஸ்தானின் ‘கழுத்து நரம்பு’ என்று அறிவித்ததை நினைவு கூர்கிறேன். எனவே, ஒரு நாள் காஷ்மீர் பாகிஸ்தானின் ஓர் அங்கமாக மாறும்” என்று தெரிவித்தார்.

இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறும்போது, “காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணையப் போகிறதா? ஏற்கெனவே அவர்களிடம் இருக்கும் நிலப் பகுதியையே அவர் களால் சமாளிக்க முடியவில்லை. எங்களை வைத்துக் கொண்டு அவர்கள் என்ன செய்வார்கள்?’’ என்று கேட்டார்.

<div class="paragraphs"><p>ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா</p></div>
மத்திய அரசின் நடவடிக்கையால் சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் அச்சுறுத்தலுக்கு முடிவு: குடியரசுத் தலைவர் முர்மு பாராட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in