

ஷிம்லா: இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த 43 நாட்களாக பெய்து வரும் மழையினால் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது. சுமார் ரூ.910 கோடி மதிப்பிலான பொதுச் சொத்துகள் சேதமடைந்துள்ளன.
அங்கு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளதாக, மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இதில், அதிகபட்சமாக லஹால் மற்றும் ஸ்பிட்டி ஆகிய மாவட்டங்களில் தலா 14 பேரும், காங்க்ரா மாவட்டத்தில் 12 பேரும் உயிரிழந்துள்ளனர். இதில், அதிகபட்சமாக பொதுப்பணித் துறைக்கு ரூ.686 கோடி, மின் துறைக்கு ரூ.203 கோடி உட்பட ரூ.910 கோடி பொதுச் சொத்துகள் சேதமடைந்துள்ளன. என்எச்-154, 21 ஆகிய 2 தேசிய நெடுஞ்சாலைகளும் பாதிப்படைந்துள்ளன.