முசாபர் நகர் கலவர வழக்கில் 22 பேர் விடுதலை - போதிய ஆதாரம் இல்லை என நீதிமன்றம் விடுவித்தது

முசாபர் நகர் கலவர வழக்கில் 22 பேர் விடுதலை - போதிய ஆதாரம் இல்லை என நீதிமன்றம் விடுவித்தது
Updated on
1 min read

புதுடெல்லி: ​மு​சாபர்​நகர் கலவரம் தொடர்​பான வழக்கில் குற்றம்சாட்​டப்​பட்ட 22 பேரை​யும் ஆதாரம் இல்லை எனக் கூறி நீதிமன்​றம் விடு​தலை செய்​துள்​ளது.

உத்​தர பிரதேச மாநிலம் முசாபர்​நகரில் கடந்த 2013ல் நடந்த கலவரத்​தில் 60-க்​கும் மேற்​பட்​டோர் கொல்​லப்​பட்​டனர். சுமார் 40,000 பேர் அந்​நகரை விட்டு இடம்​பெயர்ந்​தனர். இந்த சம்பவத்தில் 2013, செப்​டம்​பர் 8ம் தேதி முகமது பூர் ரைசிங் கிராமத்​தி​லும் வன்​முறை ஏற்​பட்​டது.

இது தொடர்​பான கொலை, கொள்ளை மற்​றும் தீவைப்பு வழக்​கில் 26 பேர் மீது சிறப்பு புல​னாய்​வுக் குழு (எஸ்​ஐடி) வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்​தி​யது. முசாபர் நகரின் கூடு​தல் மாவட்ட மற்​றும் அமர்வு நீதி​மன்​றத்​தில் குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்தது. வழக்கு விசா​ரணை காலத்​தில் 4 பேர் இறந்​த​தால் 22 பேர் வழக்கை எதிர்​கொண்​டனர்.

இந்​நிலை​யில் இந்த வழக்​கில் குற்​றச்​சாட்​டு​களை சந்​தேகத்​திற்கு இடமின்றி எஸ்​ஐடி நிரூபிக்க தவறி​விட்​ட​தாக கூறி 22 பேரை​யும் நீதிபதி கனிஷ்க் குமார் விடு​தலை செய்​தார்.

இதுகுறித்து அரசு வழக்​கறிஞர் நரேந்​திர சர்மா கூறுகை​யில், “ஹனீஃப் என்​பவர் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கை எஸ்ஐடி பதிவு செய்து விசா​ரணை செய்​தது. அதில் கிராமத்​தில் உள்ள வீடு​களை கலவரக்​காரர்​கள் நூற்​றுக்​கணக்​கானோர் தாக்கிய​தாக கூறப்​பட்​டது. அவர்​களின் சொத்​துகளை கொள்ளையடித்​து, வீடு​களுக்​கும் தீ வைத்​த​தாகப் புகாரில் கூறப்பட்​டிருந்​தது.

தாக்​குதலில் புகார்​தா​ரரின் தந்தை ரஹீஷுதீன் கொல்லப்பட்டதாக​வும் குற்​றம் சாட்​டப்​பட்​டது. கலவரக்​காரர்​கள் ஒரு மசூ​தியை சேதப்​படுத்​தி​ய​தாக​வும், ஒரு காவலருக்கு சொந்தமான மோட்​டார் சைக்​கிளுக்​குத் தீ வைத்​த​தாக​வும் குற்றம் சாட்​டப்​பட்​டது. எனினும் சாட்​சி​யங்​கள் குறை​பாடு காரணமாக அனை​வரும் விடுவிக்​கப்​பட்​டனர்” என்​றார்.

விடுவிக்​கப்​பட்ட அனை​வரும் முகமது பூர் ரைசிங் கிராமத்​தைச் சேர்ந்​தவர்​கள். இவர்​கள் அனில், சுபாஷ், சஞ்​சீவ், கரண், ஷேர் சிங், ரிஷி​பால், ஹன்​சர்​பால், பிரமோத், விக்​கி, பாதல், மதன், ஜெய ​நா​ராயண், பிரிஜ்வீர், வினோத், கலா, பர்​வீன், ஜக்​பால், பிரேம்​பால்​, பப்​பு, நீது, பூரா, ஹரேந்​தர்​ சிங்​ ஆகியோர்​ ஆவர்​.

முசாபர் நகர் கலவர வழக்கில் 22 பேர் விடுதலை - போதிய ஆதாரம் இல்லை என நீதிமன்றம் விடுவித்தது
“பணத்தை மட்டுமே நம்பி தேர்தலை திமுக சந்திக்கிறது” - அன்புமணி குற்றச்சாட்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in