“பணத்தை மட்டுமே நம்பி தேர்தலை திமுக சந்திக்கிறது” - அன்புமணி குற்றச்சாட்டு

“பணத்தை மட்டுமே நம்பி தேர்தலை திமுக சந்திக்கிறது” - அன்புமணி குற்றச்சாட்டு
Updated on
2 min read

தமி​ழ​கத்​தில் சுதந்​திரத்​துக்கு பிறகு இருந்த 12 முதல்​வர்​களில் மிக​வும் மோச​மான​வர் மு.க.ஸ்​டா​லின். அதி​முக கூட்​டணி வெற்றி பெறு​வது உறுதி என்று பாமக இளைஞரணி பொதுக்​குழு கூட்​டத்​தில் அக்​கட்​சி​யின் தலை​வர் அன்​புமணி தெரி​வித்​தார்.

பாமக​வின் இளைஞரணி பொதுக்​குழுக் கூட்​டம் சென்னை ராயப்​பேட்​டை​யில் உள்ள ஒய்​எம்​சிஏ திடலில் நேற்று நடை​பெற்​றது. கட்​சி​யின் தலை​வர் அன்​புமணி முன்​னிலை​யில், இளைஞரணி தலை​வர் கணேஷ்கு​மார் தலை​மை​யில் நடந்த கூட்​டத்​தில் 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பாமக அங்​கம் வகிக்​கும் அதி​முக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் வெற்​றிக்கு கடுமை​யாக உழைக்க உறு​தி​யேற்​போம். திமுக ஆட்​சி​யின் மீதான ரூ. 6 லட்​சம் கோடி ஊழல் குற்​றச்​சாட்​டு​கள் தொடர்​பாக ஆணை​யம் அமைத்து விசா​ரணை நடத்த அரசு ஆணை​யிட வேண்​டும். மது, கஞ்சா உள்​ளிட்ட போதை பொருள்​கள் இல்​லாத தமி​ழ​கம் அமைக்க திமுக ஆட்​சியை வீட்​டுக்கு அனுப்ப தமிழக மக்​கள் முன்வர வேண்​டும் உள்​ளிட்ட தீர்​மானங்​கள் நிறை​வேற்​றப்​பட்​டன. கூட்​டத்​தில் அன்​புமணி பேசி​ய​தாவது:

தமி​ழ​கத்​தில் திமுக மீண்​டும் ஆட்​சியை பிடிக்க கூடாது. அதற்​காகத்​தான் தமி​ழ​கம் முழு​வதும் திமுக​வின் அவல ஆட்​சியை அம்​பலப்​படுத்​தினேன். பணத்தை மட்​டுமே நம்பி திமுக இந்த தேர்​தலை சந்​திக்​கிறது. இளைஞர்​களால் எத்​தனையோ நாடு​களில் பல புரட்​சிகள் நடை​பெற்​றிருக்​கிறது. தமி​ழ​கத்​தி​லும் அது​போன்ற ஒரு புரட்சி நடக்​கும். தமி​ழ​கத்​தில் அதி​முக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் நாம் இணைந்​திருக்​கி​றோம். குறைந்​தது 200 தொகு​தி​களில் இந்த கூட்​டணி வெற்றி பெறு​வது உறு​தி. திமுக ஒற்றை இலக்​கத்​தில் வெற்றி பெறும்.

அரசு ஊழியர்​கள் உட்பட அனைத்து தரப்பு மக்​களும் திமுக ஆட்​சி​யின் மீது கடும் கோபத்​தில் இருக்​கி​றார்​கள். அனை​வ​ருக்​கும் முதல்​வர் ஸ்டா​லின் துரோகம் செய்​துள்​ளார். திமுக ஏதாவது ஒரு அறி​விப்​பு​களை முதல்​வர் வெளி​யிட்டு கொண்​டிருக்​கி​றார். உங்​கள் கனவை சொல்​லுங்​கள் என்று ஒரு திட்​டத்தை திமுக அரசு அறி​முகப்​படுத்​தி​யுள்​ளது. பாமக​வினர் அனை​வ​ரும், அந்த இணை​யதளத்​திற்கு உள்ளே சென்று உங்​கள் மனதில் என்​னென்ன தோன்​றுகிறதோ அதை கட்​டா​யம் பதி​விடுங்​கள். கெட்ட வார்த்​தையை பதி​விட வேண்​டாம்.

நம்ம கூட்​டணி நிர்​வாகி​கள் அனை​வ​ரும் ஒற்​றுமை​யாக செயல்பட வேண்​டும். நம்​முடைய வெற்றி தான் திமுக​வுக்கு தோல்​வி​யாக மாறும். ராம​தாஸை சுற்றி சில துரோகி​கள் இருக்​கி​றார்​கள். அதில் முக்​கிய​மான துரோகி ஜி.கே.மணி. ராம​தாஸிடம் தொடர்ந்து பொய்​யாக சொல்​லி, அவரது மனதை மாற்​றுகி​றார்​கள். தமி​ழ​கத்​தில் அமைச்​சர்​கள் என்ற போர்​வை​யில் சில வியா​பாரி​கள் இருக்​கி​றார்​கள். எ.வ.வேலு அமைச்​சர் கிடை​யாது. அவர் ஒரு வியா​பாரி. இன்​னும் இரண்டு மாதத்​தில் அவர் கம்பி என்ன போகி​றார். கிரா​மங்​கள் அளவில் திமுக​வினர் ஓட்​டுக்கு பணம் கொடுக்க, பணத்தை கொண்டு சென்று பத்​திர​மாக பதுக்கி விட்​டனர். அமைச்​சர் எ.வ.வேலு போலவே இன்​னும் நான்கு வியா​பாரி​கள் அமைச்​சர​வை​யில் இருக்​கி​றார்​கள். பல்​வேறு துறை​களி​லும் ஊழல் நடை​பெற்று வரு​கிறது. நகராட்சி நிர்​வாகத்​துறை ஊழல் தொடர்​பாக, அமலாக்​கத்​துறை அறிக்கை அனுப்​பி​யும் திமுக அரசு இன்​னும் நடவடிக்கை எடுக்​க​வில்​லை.

பணத்தை வைத்து வெற்றி பெற்று விடலாம் என திமுக​வினர் மிதப்​பில் இருக்​கி​றார்​கள். தமி​ழ​கத்​தில் சுதந்​திரத்​துக்கு பிறகு 12 முதல்​வர்​கள் இருந்​துள்​ளனர். அவர்​களில் மிக மிக மோச​மான முதல்​வர் என்​றால் அது மு.க.ஸ்​டா​லின் தான். திமுக ஆட்​சியை பார்த்து இன்​றைக்கு மக்​கள் மட்​டும் அல்ல, அவர்​கள் கூட்​ட​ணி​யில் இருக்​கக்​கூடிய கூட்​டணி கட்​சிகளே கடும் வெறுப்​பில் இருக்​கி​றார்​கள். திமுக கூட்​ட​ணி​யில் இருப்​பவர்​கள் யாரும் திமுக​வுக்கு ஆதர​வாக வேலை செய்ய போவது கிடை​யாது. அவர்​களே தோற்​கடித்து விடு​வார்​கள். தமிழக தேர்​தல் களம், அதி​முக கூட்​ட​ணிக்கு சாதக​மாக உள்​ளது. அதி​முக கூட்​டணி நிச்​ச​யம் வெற்றி பெறும். இனிமேல் தமி​ழ​கத்​தில் திமுக ஆட்​சிக்கு வர முடி​யாது. இவ்​வாறு அவர் பேசி​னார்​.

“பணத்தை மட்டுமே நம்பி தேர்தலை திமுக சந்திக்கிறது” - அன்புமணி குற்றச்சாட்டு
‘12 தொகுதிகள் இல்லாவிட்டால் ராஜ்ய சபா சீட் வேண்டும்’ - மல்லுக்கட்டத் தயாராகும் மதிமுக

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in