உணவக உரிமையாளர் மரண வழக்கு: கைதான மாடல் ஷ்ரத்தா உள்ளிட்ட 3 பேரை உ.பி. அழைத்துச் செல்ல நீதிமன்றம் அனுமதி

ரஷ்மி துபே, ஷ்ரத்தா துபே மற்​றும் தன்​வீர் அலி.

ரஷ்மி துபே, ஷ்ரத்தா துபே மற்​றும் தன்​வீர் அலி.

Updated on: 
1 min read

மும்பை: உத்தர பிரதேச மாநிலம் லக்​னோ​வில் உணவக உரிமையாளர் சிவா சர்மா (28) கடந்த அக்​டோபர் 9 அன்று ஒரு குடியிருப்பு கட்​டிடத்​திலிருந்து கீழே விழுந்து உயி​ரிழந்​தார்.

இதுதொடர்​பாக, மாடல் அழகி​யும் சோஷியல் மீடியா பிரபலமுமான ஷ்ரத்தா துபே (31), அவரது சகோ​தரி ரஷ்மி துபே மற்​றும் அவர்​களின் ஓட்​டுநர் தன்​வீர் அலி (எ) டேனிஷ் ஆகியோர் மீது வழக்​குப்​ப​திவு செய்​யப்​பட்​டது.

இதையடுத்து அவர்​கள் மூன்று பேரும் கான்​பூர், ஆக்ரா மற்​றும் நேபாளம் ஆகிய இடங்​களுக்கு தப்​பிச் சென்று இறு​தி​யாக மகா​ராஷ்டிர மாநிலம் நாக்​பூர் வந்​தடைந்​துள்​ளனர். உத்தர பிரதேச காவல் துறை​யினர் அளித்த ரகசி​யத் தகவலின் அடிப்​படை​யில், நாக்​பூர் குற்​றப்​பிரிவு காவல்துறை இந்த மூவரை​யும் கைது செய்​தனர்.

நாக்​பூர் குற்​றப்​பிரிவு மூத்த காவல் ஆய்​வாளர் சுபாங்கி தேஷ்​முக் தலை​மையி​லான குழு மற்​றும் சிறப்பு அதிரடிப் படை அதி​காரி​கள், கைது செய்​யப்​பட்ட மூவரை​யும் முதன்மை நீதித்​துறை நடு​வர் சமீர் சத்​தா​ராம் காமத் முன்​னிலை​யில் நேற்று பிற்​பகல் 2:30 மணி​யள​வில் ஆஜர்​படுத்​தினர்.

வழக்கை விசா​ரித்த நீதிபதி அவர்​களை உ.பி. அழைத்​துச் செல்ல அனு​மதி வழங்கி உத்​தர​விட்​டார். ஷ்ரத்​தாவும் உணவக உரிமை​யாளர் சிவா சர்மாவும் திரு​மணம் செய்து கொள்​ளாமல் ஒன்​றாக வாழ்ந்தனர். இந்த நிலை​யில், அவர்​களது குடி​யிருப்​பின் 4-வது மாடியி​லிருந்து கீழே விழுந்து உயி​ரிழந்​தார்.

இது முதலில் விபத்து என கருதப்​பட்ட நிலை​யில், சிவா சர்​மா​வின் தாய் கொடுத்த புகாரையடுத்து அக்​டோபர் 10-ல் இது கொலை வழக்​காக மாற்​றப்​பட்​டது.

ஆனால், சிவா சர்​மா​வின் மரணத்​தில் தனக்கு எந்​தப் பங்​கும் இல்லை என்​றும், நிதி நெருக்​கடி காரண​மாகவே அவர் தற்​கொலை செய்​து​கொண்​டார் என்​றும் ஷ்ரத்தா மறுப்பு தெரி​வித்​துள்​ளார். மேலும், சிவா சர்​மா கடன் தொல்லையால் உயிரை மாய்த்​துக் கொள்​ளப் போவதாக கூறிய​தாக​வும்​ ஷ்ரத்தா தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>ரஷ்மி துபே, ஷ்ரத்தா துபே மற்​றும் தன்​வீர் அலி.</p></div>
பிரபல இன்ஸ்டாகிராம் நிதி ஆலோசகர் ஹரீஷ் தற்கொலை: யூடியூபர் ஜேசன் சாமுவேல் மீது போலீஸார் வழக்குப் பதிவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in