பிரபல இன்ஸ்டாகிராம் நிதி ஆலோசகர் ஹரீஷ் தற்கொலை: யூடியூபர் ஜேசன் சாமுவேல் மீது போலீஸார் வழக்குப் பதிவு

பிரபல இன்ஸ்டாகிராம் நிதி ஆலோசகர் ஹரீஷ் தற்கொலை: யூடியூபர் ஜேசன் சாமுவேல் மீது போலீஸார் வழக்குப் பதிவு
Updated on: 
1 min read

முட்டுக்காடு: யூடியூபர் வெளி​யிட்ட காணொலியால் மன உளைச்​சலுக்கு ஆளானதாகக் கூறப்​படும் பிரபல இன்ஸ்டாகிராம் நிதி ஆலோ​சகர் ஹரீஷ் (26) தற்​கொலை செய்து கொண்ட சம்​பவத்​தில், யூடியூபர் ஜேசன் சாமுவேல் மீது கானத்​தூர் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

புதுச்​சேரியைச் சேர்ந்த விநாயகத்​தின் மகன் ஹரீஷ். இவர் ‘கேபிட்​டல் அண்ட் டிஜிட்​டல் சர்​வீஸ்’ என்ற பெயரில் இணை​ய​ வழி நிதி ஆலோ​சனை நிறு​வனம் நடத்தி வந்தார்.

மேலும் ‘ஃபைனான்ஸ் வித் ஹரீஷ்’ என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் பக்​கத்தை நடத்தி, நிதி மேலாண்மை தொடர்​பான ஆலோ​சனைகளை வழங்கி வந்​தார். இவரை 13 லட்​சத்​துக்​கும் அதி​க​மானோர் பின்​தொடர்ந்து வந்​தனர்.

செங்​கல்​பட்டு மாவட்​டம், முட்​டுக்​காடு கடற்​கரை அருகேயுள்ள செரி​னிட்டி வில்​லா​வில் ஹரீஷ் தங்​கி​யிருந்​தார். இந்​நிலை​யில் கடந்த சில நாட்​களுக்கு முன்பு யூடியூபர் ஜேசன் சாமுவேல் வெளி​யிட்ட காணொலி​யில் ஹரீஷுக்கு எதிராகப் பல்​வேறு விமர்​சனங்​களும் குற்​றச்​சாட்​டுகளும் இடம்​பெற்​றதாகக் கூறப்​படு​கிறது. இத​னால் ஹரீஷ் மன உளைச்​சலுக்கு ஆளானதாகத் தெரி​கிறது.

இந்​நிலை​யில் ஹரீஷைப் பார்க்​க அவரது வீட்டுக்கு கடந்த 20-ம் தேதி நண்​பர் ராகவ் சென்றார். அங்கு அறை​யில் ஹரீஷ் இறந்த நிலை​யில் இருப்​ப​தைக் கண்​டார். உடனடி​யாக அவரை கேளம்​பாக்​கத்​தில் உள்ள தனியார் மருத்​து​வ​மனைக்​குக் கொண்டு சென்​றார். அங்கு பரிசோதித்த மருத்​து​வர்​கள் ஹரீஷ் ஏற்​கெனவே இறந்​து​விட்​ட​தாகத் தெரி​வித்​தனர்.

கானத்​தூர் போலீ​ஸார், உடலைக் கைப்​பற்றி விசா​ரணை நடத்​தினர். ஹரீஷின் தந்தை விநாயகம் அளித்த புகாரின் பேரில், யூடியூபர் ஜேசன் சாமுவேல் மீது தற்​கொலைக்​குத் தூண்​டுதல் பிரி​வின் கீழ் வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டது. தலைமறைவாக உள்ள அவரை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர்.

மேலும் ஹரீஷ் பதிவு செய்த காணொலி​யில், ஜேசன் சாமுவேல் தன்​னிடம் ரூ.3 கோடி கேட்டு மிரட்​டிய​தாகவும், பணம் தராவிட்​டால் சமூக வலை​தளக் கணக்​கு​களை முடக்​கு​வ​தாகவும், பெற்​றோருக்​குத் தீங்கு விளை​விப்​ப​தாக கூறிய​தாகவும் குற்​றம்​சாட்​டி​யிருந்​த​தாக தெரி​கிறது.

இந்​தக் குற்​றச்​சாட்​டுகளின் உண்​மைத்​தன்மை, சமூக வலை​தளப்பதிவு​கள் மற்​றும் டிஜிட்​டல் ஆதா​ரங்​கள் குறித்து போலீ​ஸார் தொடர்ந்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

பிரபல இன்ஸ்டாகிராம் நிதி ஆலோசகர் ஹரீஷ் தற்கொலை: யூடியூபர் ஜேசன் சாமுவேல் மீது போலீஸார் வழக்குப் பதிவு
நாதக நிர்வாகிகள் கைதைக் கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் அக்.24-ல் ஆர்ப்பாட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in